< Back
ஆன்மிகம்
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நவம்பர் மாதம் நடக்கும் உற்சவங்கள் விவரம்
ஆன்மிகம்

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நவம்பர் மாதம் நடக்கும் உற்சவங்கள் விவரம்

தினத்தந்தி
|
28 Oct 2024 5:30 AM IST

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர்.

திருமலை,

திருமலை-திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் அடுத்த மாதம் (நவம்பர்) 1-ந்தேதி கேதார கவுரி விரதம், 3-ந்தேதி பாகினி ஹஸ்த போஜனம், திருமலைநம்பி சாத்துமுறை, 5-ந்தேதி நாகுல சவிதி, பெரிய சேஷ வாகன வீதிஉலா, 6-ந்தேதி மணவாள மாமுனிகள் சாத்துமுறை, 8-ந்தேதி வருடாந்திர புஷ்ப யாக அங்குரார்ப்பணம், 9-ந்தேதி ஸ்ரீவாரி புஷ்பயாகம், அத்ரி மகரிஷி வருட திரு நட்சத்திரம், பிள்ளை லோகாச்சாரியார் வருட திருநட்சத்திரம், பொய்கையாழ்வார் வருட திருநட்சத்திரம், பூதத்தாழ்வார் வருட திருநட்சத்திரம், வேதாந்த தேசிகர் சாத்துமுறை, 10-ந்தேதி பேயாழ்வார் வருட திருநட்சத்திரம், 11-ந்தேதி யாக்ஞ வல்கிய ஜெயந்தி, 12-ந்தேதி பிரபோதனா ஏகாதசி, 13-ந்தேதி கைசிக துவாதசி ஆஸ்தானம், சதுர்மாஸ்ய விரதம் முடிவடைகிறது. 15-ந்தேதி கார்த்திகை மாத பவுர்ணமி, 28-ந்தேதி தன்வந்திரி ஜெயந்தி, 29-ந்தேதி மாத சிவராத்திரி.

மேற்கண்டவாறு கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்