< Back
ஆன்மிகம்

ஆன்மிகம்
திருவள்ளூர் வீரராகவ பெருமாள் கோவிலில் தேரோட்டம்

30 Jan 2025 2:37 PM IST
ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக வீரராகவ பெருமாள், தேரில் எழுந்தருளி நான்கு மாட வீதிகளில் வலம் வந்து அருள்பாலித்தார்.
திருவள்ளூர்:
திருவள்ளூர் வீரராகவ பெருமாள் கோவிலில் இன்று தேரோட்டம் நடைபெற்றது. திருத்தேரில் சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீதேவி, பூதேவி சமேதராய் வீரராகவ பெருமாள் எழுந்தருளினார். பின்னர் தேர் நான்கு மாட வீதிகளில் வலம் வந்தது.
திருவள்ளூர், காஞ்சிபுரம், சென்னை உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரில் வலம் வந்த வீரராகவ பெருமாளை வழிபட்டனர். பக்தர்கள் உப்பு, மிளகு ஆகியவற்றை தேர் சக்கரத்தின் மீது கொட்டி நேர்த்திக்கடனை நிறைவேற்றினர்.