< Back
ஆன்மிகம்
ஆன்மிகம்
ராமேஸ்வரம் கோவிலில் மாலை அணிந்து விரதத்தை தொடங்கிய அய்யப்ப பக்தர்கள்
|16 Nov 2024 11:42 PM IST
சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு மாலை அணிவதற்காக ராமேசுவரம் கோவிலில் ஏராளமான பக்தர்கள் குவிந்தனர்.
ராமேசுவரம்,
கார்த்திகை மாத பிறப்பை முன்னிட்டு சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு மாலை அணிந்து விரதம் இருப்பதற்காக நேற்று ராமேசுவரம் கோவிலுக்கு தமிழகத்தின் பல ஊர்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்தனர். இதனால் ராமேஸ்வரம் கோவிலில் வழக்கத்தைவிட பக்தர்கள் கூட்டமும் அதிகமாகவே இருந்தது.
இவ்வாறு வந்த பக்தர்கள் அக்னி தீர்த்த கடல் மற்றும் கோவிலில் உள்ள 22 தீர்த்தக்கிணறுகளிலும் புனித நீராடினர். தொடர்ந்து கோவிலில் உள்ள விநாயகர் சன்னதி முன்பு நின்று விநாயகரை தரிசனம் செய்து கழுத்தில் அய்யப்பன் மாலை அணிந்து விரதத்தையும் தொடங்கினர். தொடர்ந்து மாலை அணிந்த பக்தர்கள் கோவிலில் நீண்ட வரிசையில் நின்று சாமி மற்றும் அம்பாள் தரிசனம் செய்தனர்.