< Back
ஆன்மிகம்
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் டிசம்பர் மாதம் நடக்கும் விழாக்கள் அறிவிப்பு
ஆன்மிகம்

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் டிசம்பர் மாதம் நடக்கும் விழாக்கள் அறிவிப்பு

தினத்தந்தி
|
29 Nov 2024 12:56 AM IST

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் டிசம்பர் மாதம் நடக்கும் விழாக்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

திருமலை,

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தினந்தோறும் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். இந்த நிலையில், ஏழுமலையான் கோவிலில் அடுத்த மாதம் (டிசம்பர்) நடைபெறும் விழாக்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன் விவரம் வருமாறு:-

டிசம்பர் 1-ந்தேதி 4-வது முறையாக அதர்வன வேதப் பாராயணம் தொடக்கம், 11-ந்தேதி சர்வ ஏகாதசி, 12-ந்தேதி சக்கர தீர்த்த முக்கோட்டி உற்சவம், 13-ந்தேதி திருமங்கை ஆழ்வார் சாத்துமுறை உற்சவம், 14-ந்தேதி திருப்பாணாழ்வார் வருட திருநட்சத்திரம்.

15-ந்தேதி கார்த்திகை தீபத்திருவிழா, 16-ந்தேதி தனுர் மாதம் (தமிழ் மார்கழி மாதம்) தொடக்கம், 26-ந்தேதி சர்வ ஏகாதசி, 29-ந்தேதி தொண்டரடி பொடியாழ்வார் வருட திருநட்சத்திரம், 30-ந்தேதி ஆத்யாயன உற்சவம் தொடக்கம். மேற்கண்ட விழாக்கள் நடக்கிறது.

மேலும் செய்திகள்