இந்த வார விசேஷங்கள்: 7-1-2025 முதல் 13-1-2025 வரை
|திருவரங்கத்தில் நாளை மறுநாள் நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து நாச்சியார் திருக்கோலத்துடன் அர்ச்சுன மண்டபம் எழுந்தருளல்.
7-ந்தேதி (செவ்வாய்)
* திருவில்லிபுத்தூர் ஆண்டாள் சன்னிதியில் எண்ணெய்க் காப்பு உற்சவம் ஆரம்பம்.
* திருநெல்வேலி நெல்லையப்பர்-காந்திமதி அம்மன் ரிஷப வாகனத்தில் பவனி.
* ஆழ்வார்திருநகரி நம்மாழ்வார் திருவீதி உலா.
* குரங்கணி முத்துமாலையம்மன் புறப்பாடு.
* சமநோக்கு நாள்.
8-ந்தேதி (புதன்)
* குற்றாலம் திருக்குற்றாலநாதர் பஞ்சமூர்த்திகளுடன் ரத உற்சவம்.
* சிதம்பரம் சிவபெருமான் ரிஷப வாகனத்தில் பவனி.
* திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள், முரளி கண்ணன் திருக்கோலம்.
* திருவைகுண்டம், திருமாலிருஞ்சோலை கள்ளழகர் தலங்களில் பகற்பத்து உற்சவம்.
* சமநோக்கு நாள்.
9-ந்தேதி (வியாழன்)
* திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கண்ணன் திருக்கோலம்.
* திருவரங்கம் நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து நாச்சியார் திருக்கோலத்துடன் அர்ச்சுன மண்டபம் எழுந்தருளல்.
* திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் நாச்சியார் திருக்கோலம்.
* கீழ்நோக்கு நாள்.
10-ந்தேதி (வெள்ளி)
* வைகுண்ட ஏகாதசி.
* கார்த்திகை விரதம்.
* திருவரங்கம் நம்பெருமாள் முத்தங்கி சேவை.
* திருநெல்வேலி நெல்லையப்பர், சங்கரன்கோவில் சிவபெருமான் பவனி.
* கீழ்நோக்கு நாள்.
11-ந்தேதி (சனி)
* சனிப் பிரதோஷம்.
* ஆவுடையார்கோவில் மாணிக்கவாசகர் மகாரத உற்சவம், மாலை ஆனந்த தாண்டவ காட்சி.
* சிதம்பரம் சிவபெருமான் தங்க ரதத்தில் பவனி.
* மேல்நோக்கு நாள்.
12-ந்தேதி (ஞாயிறு)
* மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோவிலில் இரவு நடேசர் மகா அபிஷேகம்.
* காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள், மதுரை கூடலழகர் தலங்களில் இராப்பத்து உற்சவ சேவை.
* சங்கரன்கோவில் சிவபெருமான் ரத உற்சவம், சுவாமி அம்பாள் புருசாமிருக வாகனத்தில் பவனி.
* சமநோக்கு நாள்.
13-ந்தேதி (திங்கள்)
* பவுர்ணமி விரதம்.
* ஆருத்ரா தரிசனம்.
* போகிப்பண்டிகை.
* திருச்செந்தூர் சுப்பிரமணியர் கோவிலில் பார்வதி அம்மன் ஊஞ்சல்.
* மேல்நோக்கு நாள்.