இந்த வார விசேஷங்கள்: 5-11-2024 முதல் 11-11-2024 வரை
|திருச்செந்தூர் முருகப்பெருமான் கோவிலில் நாளை மறுநாள் மாலையில் சூரசம்கார விழா.
5-ந்தேதி (செவ்வாய்)
* சிக்கல் சிங்காரவேலவர் வேணுகோபாலன் திருக்கோலம், இரவு வெள்ளி ரிசப வாகனத்தில் பவனி.
* குமாரவயலூர் முருகப்பெருமான் கஜமுக சூரனுக்கு பெருவாழ்வு தந்தருளல்.
* நாக சதுர்த்தி, சதுர்த்தி விரதம்
* சமநோக்கு நாள்.
6-ந்தேதி (புதன்)
* மதுரை பழமுதிர்சோலை முருகப்பெருமான் காலை சப்பரத்தில் பவனி.
* திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயண பெருமாள் ஊஞ்சல் உற்சவ கொடியேற்றம்.
* சிக்கல் சிங்காரவேலவர் தேர்- சக்தி வேல் வாங்குதல்
* கீழ்நோக்கு நாள்.
7-ந்தேதி (வியாழன்)
* முகூர்த்த நாள்.
* சஷ்டி விரதம்.
* திருச்செந்தூர் முருகப்பெருமான் கோவில் உள்பட முருகன் கோவில்களில் சூரசம்கார விழா.
* சிக்கல் சிங்காரவேலவர் ஆட்டுக்கிடா வாகனத்தில் பவனி.
* கீழ்நோக்கு நாள்.
8-ந்தேதி (வெள்ளி)
* முகூர்த்த நாள்.
* வள்ளியூர் முருகப்பெருமான் கோ ரதத்திலும், இரவு பல்லக்கிலும் புறப்பாடு.
* திருச்செந்தூர், குமாரவயலூர், சோலை மலை உள்ளிட்ட முருகன் கோவில்களில் திருக்கல்யாண உற்சவம்.
* சிக்கல் சிங்காரவேலர் சூர்ணாபிஷேகம்
* திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் மாடவீதி புறப்பாடு.
* மேல்நோக்கு நாள்.
9-ந்தேதி (சனி)
* திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயண பெருமாள் ஊஞ்சல் சேவை,
* திருஇந்துளூர் பரிமள ரெங்கராஜர் சேஷ வாகனத்தில் புறப்பாடு.
* உத்திரமாயூரம் வள்ளலார் சன்னிதியில் சுவாமி பஞ்ச மூர்த்திகளுடன் புறப்பாடு.
* மேல்நோக்கு நாள்.
10-ந்தேதி (ஞாயிறு)
* திருஇந்துளூர் பரிமள ரெங்கராஜர் கருட வாகனத்தில் பவனி.
* சிக்கல் சிங்காரவேலவர் விடையாற்று உற்சவம்.
* திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் குளக்கரை ஆஞ்சநேயருக்கு திருமஞ்சனம்.
* மேல்நோக்கு நாள்.
11-ந்தேதி (திங்கள்)
* திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயண பெருமாள் ஊஞ்சல் உற்சவம்.
* திருமாலிருஞ்சோலை கள்ளழகர் ரக்சா பந்தனம்.
* திருத்தணி முருகப்பெருமானுக்கு பாலாபிஷேகம்.
* திருஇந்துளூர் பரிமள ரெங்கராஜர் அனுமன் வாகனத்தில் பவனி.
* சங்கரன்கோவில் கோமதியம்மன் புஷ்பப் பாவாடை தரிசனம்.
* கீழ்நோக்கு நாள்.