இந்த வார விசேஷங்கள்: 3-12-2024 முதல் 9-12-2024 வரை
|திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் நாளை மறுநாள் கார்த்திகை தீப உற்சவம் ஆரம்பம்.
3-ந் தேதி (செவ்வாய்)
* சுவாமிமலை முருகப் பெருமானுக்கு ஆயிரம் நாமாவளி கொண்ட தங்கப் பூமாலை சூடியருளல்.
* திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஆண்டாளுக்கு திருமஞ்சனம்.
* திருவைகுண்டம் கள்ளபிரானுக்கு பால் அபிஷேகம்.
* கீழ்நோக்கு நாள்.
4-ந் தேதி (புதன்)
* திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் கார்த்திகை தீப உற்சவம் ஆரம்பம்.
* பழனி ஆண்டவர் விழா தொடக்கம்.
* திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் நரசிம்மருக்கு திருமஞ்சனம்.
* திருப்பதி ஏழுமலையான் சகசர கலசாபிஷேகம்.
* கீழ்நோக்கு நாள்.
5-ந் தேதி (வியாழன்)
* முகூர்த்த நாள்.
* திருப்பரங்குன்றம் ஆண்டவர் கார்த்திகை உற்சவம் ஆரம்பம்.
* மிலட்டூர் விநாயகப் பெருமான் பவனி.
* திருப்பதி ஏழுமலையான் புஷ்பாங்கி சேவை.
* மேல்நோக்கு நாள்.
6-ந் தேதி (வெள்ளி)
* சஷ்டி விரதம்.
* சாத்தூர் வேங்கடேசப் பெருமாள் தோளுக்கினியானில் பவனி.
* சங்கரன்கோவில் கோமதியம்மன் தங்கப் பாவாடை தரிசனம்.
* திருமாலிருஞ்சோலை கள்ளழகர் கோவிலில் சுந்தரவல்லி தாயார் புறப்பாடு.
* மேல்நோக்கு நாள்.
7-ந் தேதி (சனி)
* மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கார்த்திகை உற்சவம் ஆரம்பம்.
* திருப்பரங்குன்றம் ஆண்டவர் அன்ன வாகனத்தில் பவனி.
* திருவள்ளூர் வீரராகவப் பெருமாள், திருவரங்கம் நம்பெருமாள், மதுரை கூடலழகர் தலங்களில் அலங்கார திருமஞ்சனம்.
* திருத்தணி முருகப்பெருமானுக்கு பால் அபிஷேகம்.
* மேல்நோக்கு நாள்.
8-ந் தேதி (ஞாயிறு)
* திருவண்ணாமலை அண்ணாமலையார் ரிஷப வாகனத்தில் பவனி.
* திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் குளக்கரை ஆஞ்சநேயருக்கு திருமஞ்சனம்.
* மேல்நோக்கு நாள்.
9-ந் தேதி (திங்கள்)
* சங்கரன்கோவில் கோமதியம்மன் 108 சங்காபிஷேகம், 1008 கலசாபிஷேகம்.
* சுவாமிமலை முருகப் பெருமான் பஞ்சமூர்த்திகளுடன் வெள்ளி மயில் வாகனத்தில் பவனி.
* திருநெல்வேலி நெல்லையப்பர் கொலு தர்பார்.
* கீழ்நோக்கு நாள்.