< Back
ஆன்மிகம்
இந்த வார விசேஷங்கள்: 29-10-2024 முதல் 4-11-2024 வரை
ஆன்மிகம்

இந்த வார விசேஷங்கள்: 29-10-2024 முதல் 4-11-2024 வரை

தினத்தந்தி
|
29 Oct 2024 11:10 AM IST

நாளை மறுநாள் திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி, திருவட்டாறு ஆதிகேசவப் பெருமாள் கோவில்களில் உற்சவம் ஆரம்பம்.

29-ந்தேதி (செவ்வாய்)

* பிரதோஷம்.

* திருநெல்வேலி காந்திமதி அம்மன் அதிகாலை திருக்கல்யாணம்.

* சுவாமிமலை முருகப் பெருமான் ஆயிரம் நாமாவளி கொண்ட தங்கப் பூமாலை சூடியருளல்.

* திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஆண்டாளுக்கு திருமஞ்சனம்.

* மேல்நோக்கு நாள்.

30-ந்தேதி (புதன்)

* திருவைகுண்டம் கள்ளபிரானுக்கு பால் அபிஷேகம்

* சமநோக்கு நாள்.

* வீரவநல்லூர் மரகதாம்பிகை ஊஞ்சல் காட்சி

31-ந்தேதி (வியாழன்)

* தீபாவளி பண்டிகை.

* முகூர்த்த நாள்.

* திருநெல்வேலி காந்திமதி அம்மன் ஊஞ்சல் காட்சி

* திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி, திருவட்டாறு ஆதிகேசவப் பெருமாள் கோவில்களில் உற்சவம் ஆரம்பம்.

* மதுரை மீனாட்சி அம்மனுக்கு வைர கிரீடம் சாற்றுதல்.

* சமநோக்கு நாள்.

1-ந்தேதி (வெள்ளி)

* அமாவாசை.

* திருநெல்வேலி காந்திமதி அம்மன் மஞ்சள் நீராட்டு விழா.

* வீரவநல்லூர் மரகதாம்பிகை ஊஞ்சல் உற்சவ சேவை.

* சங்கரன்கோவில் கோமதியம்மன் தங்கப் பாவாடை தரிசனம்.

* திருவில்லிபுத்தூர் பெரியாழ்வார் புறப்பாடு.

* சமநோக்கு நாள்.

2-ந்தேதி (சனி)

* மதுரை பழமுதிர் சோலை முருகப்பெருமான் மகா அபிஷேகம், அன்ன வாகனத்தில் பவனி.

* திருநெல்வேலி காந்திமதி அம்மன் ஊஞ்சல் உற்சவ சேவை,

* வள்ளியூர் முருகப்பெருமான் பூத வாகனத்திலும், அம்பாள் கிளி வாகனத்திலும் பவனி.

* கீழ்நோக்கு நாள்.

3-ந்தேதி (ஞாயிறு)

* குமாரவயலூர் முருகப்பெருமான் சேஷ வாகனத்தில் பவனி.

* வள்ளியூர் முருகப்பெருமான் காலை ஏக சிம்மாசனத்திலும், இரவு வெள்ளி மயில் வாகனத்திலும் வீதி உலா.

* பழமுதிர்சோலை முருகப்பெருமான் காமதேனு வாகனத்திலும், இரவு வள்ளி -தெய்வானை சமேத சுப்பிரமணியர் தங்க ரதத்திலும் பவனி.

* சமநோக்கு நாள்.

4-ந்தேதி (திங்கள்)

* சிக்கல் சிங்காரவேலர் காலை மோகன அவதாரம், இரவு தங்க மயில் வாகனத்தில் பவனி.

* உத்திரமாயூரம் வள்ளலார் சன்னிதியில் சந்திரசேகரர் புறப்பாடு.

* திருவட்டாறு சிவபெருமான் பவனி.

* சங்கரன்கோவில் கோமதியம்மன் புஷ்ப பாவாடை தரிசனம்.

* சமநோக்கு நாள்.

மேலும் செய்திகள்