இந்த வார விசேஷங்கள்: 26-11-2024 முதல் 2-12-2024 வரை
|நாளை மறுநாள் சுவாமிமலை முருகப் பெருமான் தங்கக் கவசம் அணிந்து வைர வேல் தரிசனம்.
26-ந்தேதி (செவ்வாய்)
* சுமார்த்த ஏகாதசி.
* திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோவிலில் ஆண்டாளுக்கு திருமஞ்சனம்.
* சுவாமிமலை முருகப்பெருமான் ஆயிரம் நாமாவளி கொண்ட தங்கப் பூமாலை சூடியருளல்.
* திருவில்லிபுத்தூர் ஆண்டாள், ரெங்கமன்னார் கண்ணாடி மாளிகைக்கு எழுந்தருளல்.
* சமநோக்கு நாள்.
27-ந்தேதி (புதன்)
* முகூர்த்த நாள்.
* வைஷ்ணவ ஏகாதசி.
* திருப்பதி ஏழுமலையான் கத்தவால் சமஸ்தான மண்டபம் எழுந்தருளல்.
* திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோவிலில் நரசிம்மருக்கு திருமஞ்சனம்.
* திருத்தணி முருகப்பெருமாலுக்கு பால் அபிஷேகம்.
* சமநோக்கு நாள்.
28-ந்தேதி (வியாழன்)
* முகூர்த்த நாள்.
* பிரதோஷம்.
* திருச்சானூர் பத்மாவதி தாயார் கார்த்திகை உற்சவம் ஆரம்பம்.
* சுவாமிமலை முருகப் பெருமான் தங்கக் கவசம் அணிந்து வைர வேல் தரிசனம்.
* சமநோக்கு நாள்.
29-ந்தேதி (வெள்ளி)
* முகூர்த்த நாள்.
* சங்கரன்கோவில் கோமதியம்மன் தங்கப் பாவாடை தரிசனம்.
* ராமேஸ்வரம் பர்வதவர்த்தினி அம்மன் நவசக்தி மண்டபம் எழுந்தருளி தங்கப் பல்லக்கில் புறப்பாடு.
* திருமாலிருஞ்சோலை கள்ளழகர் கோவிலில் சுந்தரவல்லி தாயார் புறப்பாடு.
* சமநோக்கு நாள்.
30-ந்தேதி (சனி)
* அமாவாசை.
* ஆழ்வார்திருநகரி நம்மாழ்வார் புறப்பாடு.
* திருக்கண்ணபுரம் சவுரிராஜப் பெருமாள், விபீஷண ஆழ்வாருக்கு நடையழகு சேவை காண்பித்தல்.
* திருப்பரங்குன்றம் ஆண்டவர் புறப்பாடு.
* கீழ்நோக்கு நாள்.
1-ந்தேதி (ஞாயிறு)
* திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் குளக்கரை ஆஞ்சநேயருக்கு திருமஞ்சனம்.
* திருவைகுண்டம் கள்ளபிரானுக்கு பால் அபிஷேகம்.
* சமநோக்கு நாள்.
2-ந்தேதி (திங்கள்)
* சங்கரன்கோவில் கோமதியம்மன் புஷ்பப் பாவாடை தரிசனம்.
* திருவெண்காடு, திருக்கழுக்குன்றம், திருவாடானை, திருக்கடவூர் தலங்களில் 1008 சங்காபிஷேகம்.
* கீழ்த்திருப்பதி கோவிந்தராஜப் பெருமாள் சன்னிதியில் கருடாழ்வாருக்கு திருமஞ்சனம்.
* சமநோக்கு நாள்.