< Back
ஆன்மிகம்
இந்த வார விசேஷங்கள்: 12-11-2024 முதல் 18-11-2024 வரை
ஆன்மிகம்

இந்த வார விசேஷங்கள்: 12-11-2024 முதல் 18-11-2024 வரை

தினத்தந்தி
|
12 Nov 2024 11:21 AM IST

நாளை மறுநாள் திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ராமருக்கு திருமஞ்சனம்.

12-ந் தேதி (செவ்வாய்)

* சர்வ ஏகாதசி.

* வள்ளியூர் சுப்பிரமணியசுவாமி - வள்ளி திருக்கல்யாணம்.

* திருவரங்கம் நம்பெருமாள் சந்தன மண்டபம் எழுந்தருளி அலங்கார திருமஞ்சனம்.

* திருவில்லிபுத்தூர் ஆண்டாள், ரெங்கமன்னார் கண்ணாடி மாளிகைக்கு எழுந்தருளல்.

* ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரானுக்கு பாலாபிஷேகம்.

* மேல்நோக்கு நாள்.

13-ந் தேதி (புதன்)

* பிரதோஷம்

* திருஇந்தளூர் பரிமள ரெங்கராஜர் திருக்கல்யாணம், இரவு வெள்ளி ரதத்தில் பவனி.

* திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயண பெருமாள் ஊஞ்சல் உற்சவம்.

* தேவகோட்டை ரெங்கநாதர் புறப்பாடு.

* சமநோக்கு நாள்.

14-ந் தேதி (வியாழன்)

* உத்திரமாயூரம் வள்ளலார் சன்னிதியில் சுவாமி பஞ்ச மூர்த்திகளுடன் புறப்பாடு.

* திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ராமருக்கு திருமஞ்சனம்.

* திருப்பதி ஏழுமலையான் மலரங்கி சேவை

* திருஇந்தளூர் பரிமள ரெங்கராஜர் வெண்ணெய்த் தாழி சேவை.

* சமநோக்கு நாள்.

15-ந் தேதி (வெள்ளி)

* பவுர்ணமி.

* திருப்போரூர் முருகப்பெருமானுக்கு பால் அபிஷேகம்.

* திருவண்ணாமலை அண்ணாமலையார், திருப்பரங்குன்றம் முருகப்பெருமான் தலங்களில் கிரிவலம்.

* ராமேஸ்வரம் பர்வதவர்த்தினி அம்மன் நவசக்தி மண்டபம் எழுந்தருளி தங்கப் பல்லக்கில் புறப்பாடு.

* கீழ்நோக்கு நாள்.

16-ந் தேதி (சனி)

* கார்த்திகை விரதம்.

* திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் திருவனந்தல் ஆரம்பம்.

* மன்னார்குடி ராஜகோபால சுவாமி, அரியக்குடி சீனிவாச பெருமாள், வடமதுரை சவுந்தரராஜ பெருமாள் தலங்களில் அலங்கார திருமஞ்சனம்.

* திருப்பரங்குன்றம் முருகப்பெருமான் தங்கமயில் வாகனத்தில் பவனி.

* கீழ்நோக்கு நாள்.

17-ந் தேதி (ஞாயிறு)

* முகூர்த்த நாள்.

* மன்னார்குடி ராஜகோபாலசுவாமி புறப்பாடு.

* திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் குளக்கரை ஆஞ்சநேயருக்கு திருமஞ்சனம்.

* திருத்தணி முருகப்பெருமானுக்கு பால் அபிஷேகம்.

* மேல்நோக்கு நாள்.

18-ந் தேதி (திங்கள்)

* சங்கரன்கோவில் கோமதியம்மன் புஷ்பப் பாவாடை தரிசனம்.

* கீழ்திருப்பதி கோவிந்தராஜப் பெருமாள் சன்னிதியில் கருடாழ்வாருக்கு திருமஞ்சனம்.

* ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரானுக்கு பால் அபிஷேகம்.

* சமநோக்கு நாள்.

மேலும் செய்திகள்