< Back
ஆலய வரலாறு
ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு திருஉத்திரகோசமங்கை கோவிலில் குவிந்த பக்தர்கள்
ஆலய வரலாறு

ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு திருஉத்திரகோசமங்கை கோவிலில் குவிந்த பக்தர்கள்

தினத்தந்தி
|
12 Jan 2025 10:15 AM IST

மரகத நடராஜருக்கு இன்று முழுவதும் அபிஷேகம், ஆராதனைகள் நடைபெறும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராமேஸ்வரம்,

ராமநாதபுரம் மாவட்டம், திருஉத்தரகோசமங்கையில் மிக பழமையான மங்களேஸ்வரி உடனுறை மங்களநாதர் கோவில் உள்ளது. இங்குள்ள நடராஜர் சந்நிதியில் விலை மதிப்பற்ற ஒற்றை பச்சை நிற மரகத கல்லால் ஆன நடராஜருக்கு மார்கழி மாதத்தில் ஆண்டுக்கு ஒருமுறை நடக்கக்கூடிய சந்தனம் காப்பு படி களைதல், அபிஷேகம், சந்தனம் காப்பிடுதல் மற்றும் ஆருத்ரா தரிசனம் பிரசித்தி பெற்றது.

ஆருத்ரா தரிசனம் திருவிழாவை முன்னிட்டு தினந்தோறும் மங்களநாதர் கோவிலில் சிறப்பு பூஜைகள், சுவாமி, அம்பாள் உற்சவர் அன்னம், ரிஷபம், மயில், பூதகணங்கள், பல்லக்கில் வீதி உலா நடைபெற்றது.

இந்நிலையில் விழாவின் முக்கிய நிகழ்வுகளாக, இன்று காலை 8 மணிக்கு மரகத நடராஜருக்கு பூசப்பட்ட சந்தனம் காப்புப் படி களைதல் மற்றும் 32 வகையான அபிஷேகங்கள், மூலிகை தைலம் சாற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது.

நாளை (13-ம் தேதி) அதிகாலை 3 மணிக்கு புதிய சந்தனம் காப்பிடுதல் மற்றும் பக்தர்கள் தரிசனம், மாலை மாணிக்கவாசகருக்கு காட்சி கொடுத்தல், கூத்தர் பெருமான் வீதி உலா நிகழ்ச்சி ஆகியவை நடைபெறுகிறது.

ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு திருஉத்திரகோசமங்கை கோவிலில் பக்தர்கள் குவிந்துள்ளனர். மரகத நடராஜர் கோவிலில் சந்தன காப்பு அகற்றப்பட்டது. ஒரு ஆண்டு கழித்து சன்னதி கதவுகள் திறக்கப்பட்டு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. மரகத நடராஜருக்கு இன்று முழுவதும் அபிஷேகம், ஆராதனைகள் நடைபெறும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்