< Back
ஆன்மிகம்
ஆன்மிகம்
சபரிமலைக்கு செல்லும் தமிழக பக்தர்களுக்கு உதவ 24 மணி நேர தகவல் மையம்
|16 Nov 2024 3:35 AM IST
சபரிமலைக்கு செல்லும் தமிழக அய்யப்ப பக்தர்களுக்கு உதவ 24 மணி நேர தகவல் மையம் அமைக்கப்பட்டுள்ளது.
சென்னை,
இந்து சமய அறநிலையத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
சபரிமலை அய்யப்பன் கோவிலில் மண்டல பூஜை 15-ந்தேதி (நேற்று) முதல் டிசம்பர் 26-ந்தேதி வரையும், மகரவிளக்கு ஜோதி திருவிழா டிசம்பர் 30-ந்தேதி முதல் 2025 ஜனவரி 19-ந்தேதி வரை நடைபெறுகிறது. இதையொட்டி சபரிமலை பயணம் மேற்கொள்ளும் தமிழ்நாடு அய்யப்ப பக்தர்களுக்கு உதவுவதற்காக இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்தில் 24 மணி நேரமும் இயங்கும் தகவல் மையம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த தகவல் மையம் 2025-ம் ஆண்டு ஜனவரி 24-ந்தேதி வரை செயல்படும். தமிழ்நாட்டிலிருந்து சபரிமலைக்கு செல்லும் அய்யப்ப பக்தர்கள் இந்த தகவல் மையச் சேவையினை கட்டணமில்லா தொலைபேசி எண்களான 044-28339999 மற்றும் 1800 425 1757-ல் அழைத்து பயன்படுத்திக் கொள்ளலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.