< Back
கைவினை கலை
ஒன் மினிட் சேலை
கைவினை கலை

'ஒன் மினிட்' சேலை

தினத்தந்தி
|
11 Jun 2023 7:00 AM IST

குடும்ப விழாக்கள் மற்றும் பண்டிகை நாட்களில் பாரம்பரிய உடையான புடவையை அணிந்து கொண்டால்தான் பலருக்கு அந்த நாள் நிறைவானதாக தோன்றும். அழகாகப் புடவை கட்டுவதை, ஒரு கலை என்றே கூறலாம்.

மாடர்ன் உடைகள் பல வந்தாலும், சேலைகள் மீது பெண்களுக்கு உள்ள ஈர்ப்பு இன்னும் குறையாமல் இருக்கிறது. காலத்துக்கு ஏற்ப சேலையிலும், அது அணியப்படும் விதத்திலும், எளிமையும், புதுமையும் புகுத்தப்படுவதே இதற்கு காரணமாகும். குடும்ப விழாக்கள் மற்றும் பண்டிகை நாட்களில் பாரம்பரிய உடையான புடவையை அணிந்து கொண்டால்தான் பலருக்கு அந்த நாள் நிறைவானதாக ேதான்றும். அழகாகப் புடவை கட்டுவதை, ஒரு கலை என்றே கூறலாம். ஆனால் தற்போது பல இளம்பெண்கள் புடவை அணிவதற்கு சிரமப்படுகின்றனர்.

அவர்களுக்காகவே தற்போது சந்தையில் கிடைக்கிறது 'ஒன் மினிட் புடவைகள்'. இவற்றை ரெடிமேட் புடவைகள் என்று அழைக்கிறார்கள்.

சிபான், பட்டு, காட்டன் என எவ்வகையான சேலையாக இருந்தாலும் இந்த முறையில் சுலபமாகக் கட்டிக் கொள்ளலாம். சாதாரணப் புடவையை படத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் குறிப்புகளின்படி, ரெடிமேட் சேலையாகத் தைத்தால் விழாக்களுக்கு சட்டென தயாராக முடியும்.

படம் 1

முந்தானைப் பகுதி எவ்வளவு நீளமாக இருக்க வேண்டுமோ அதை அளந்து, மடிப்புகள் வைத்து அவை கலையாதவாறு சேப்டிபின் குத்திக் கொள்ளுங்கள்.

படம் 2

மார்புப் பகுதியில் சேலை மடிப்புகள் எவ்வளவு அகலமாக இருக்க வேண்டும் என்று முடிவு செய்யுங்கள். இப்போது முதல் மடிப்பை உட்புறமாக திருப்பிக் கொண்டு, எல்லா மடிப்புகளையும் சேர்த்து அந்தப் பகுதியில் ஒரு தையல் போட்டுக் கொள்ளுங்கள். இந்த தையல் உள்பக்கமாக இருப்பதால் வெளியில் தெரியாது.

படம் 3

முன் பகுதியில் கொசுவம் வைப்பதற்காக 'ப்ளீட்ஸ்' எடுத்து வரிசைப் படுத்திக்கொள்ளுங்கள்.

படம் 4

அந்த மடிப்புகளை விசிறி போன்று சிறு இடைவெளியுடன் வருவதுபோல அடுக்கிக் கொள்ளுங்கள்.

படம் 5

கொசுவ மடிப்புகளை எந்த அளவிற்கு உள்ளே சொருகுவீர்கள் என்று பார்த்துக்கொள்ளுங்கள்.

படம் 6

அந்த அளவிற்கு எல்லா மடிப்புகளையும் சேர்த்து ஒரு தையல் போடுங்கள்.

அவ்வளவுதான், உங்களுடைய 'ஒன் மினிட் சேலை' ரெடி. உங்கள் உடல்வாகிற்கு ஏற்ப நீங்களே தயார் செய்திருப்பதால், உங்களுக்கு இவ்வகை சேலை அழகாகவும், பொருத்தமாகவும் இருக்கும்.

வீட்டில் தையல் இயந்திரம் இல்லாதவர்கள், இதே முறையில் கைகளால் தைத்துக்கொள்ளலாம்.

மேலும் செய்திகள்