வண்ணமயமான வளையல் பெட்டி
|வண்ணமயமான வளையல் பெட்டி தயாரிப்பு குறித்து தெரிந்து கொள்வோம்
வண்ணமயமான வளையல் பெட்டி
தேவையான பொருட்கள்:
பழைய பிளாஸ்டிக் குளிர்பான பாட்டில் | வண்ண காகிதத்தாள் | கார்ட்போர்டு அட்டை | கத்தரிக்கோல் | கத்தி | லேஸ் | உல்லன் நூல் | பெரிய மணிகள் | அலங்கார பொருட்கள் | பசை
செய்முறை:
1. பிளாஸ்டிக் குளிர்பான பாட்டிலை கத்தியைக் கொண்டு இரண்டாக வெட்டிக்கொள்ளவும்.
2. குளிர்பான பாட்டில் உருளை வடிவ பைப் போன்று இருக்கும்படி, பாட்டிலின் அடிப்பகுதியை கத்தி கொண்டு வெட்டி எடுக்கவும்.
3. அந்த பாட்டிலை கார்ட்போர்டு அட்டை மீது வைத்து, பாட்டிலின் உட்புறமாக அளவு எடுத்து, கத்தரிக்கோல் கொண்டு அதை இரண்டு வட்ட வடிவ துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.
4. வெட்டிய வட்ட வடிவ துண்டுகள் மீது வண்ண காகிதத்தாளை ஒட்டவும்.
5. பின்பு பிளாஸ்டிக் பாட்டிலை நடுப்புறமாக இரண்டு பக்கமும் வெட்டவும்.
6. இப்போது பிளாஸ்டிக் பாட்டிலின் ஓரங்களில் பசை தடவவும்.
7. படத்தில் காட்டியபடி, பாட்டிலின் இரண்டு பக்கமும் ஓரங்களில், கார்ட்போர்டு அட்டை துண்டை ஒட்டவும்.
8. அதன் பின்பு, மற்றொரு பிளாஸ்டிக் பாட்டில் துண்டை அத்துடன் சேர்த்து ஒட்டவும்.
9. வண்ண காகிதத்தாளில் பசை தடவி, பிளாஸ்டிக் பாட்டிலின் உள் மற்றும் வெளிப்புறம் ஒட்டவும்.
10. பின்பு அட்டையின் விளிம்புகளில் பசை தடவி லேஸை ஒட்டவும்.
11. இப்போது உருளை வடிவ பெட்டி போன்று கிடைக்கும். அந்த பெட்டியின் மூடி ஓரத்தில், மேல் உருளையின் நடுப்பகுதியின் உட்புறத்தில் பசை தடவி இரண்டு அங்குல உல்லன் நூலை இரண்டாக மடித்து, நூலின் முனையை பெட்டியுடன் சேர்த்து ஒட்டவும்.
12. பெட்டியின் மூடியில், கீழ் உருளையின் நடுப்பகுதியில் பெரிய மணிகளை ஒட்டவும். இது பெட்டிக்கு பூட்டு போன்று செயல்படும்.
13. உங்களுக்கு விருப்பமான அலங்காரப் பொருட்கள் கொண்டு அலங்கரித்தால், வண்ணமயமான வளையல் பெட்டி தயார்.