< Back
மாநில செய்திகள்
மூதாட்டியை தாக்கிய பெண் கைது
நாமக்கல்
மாநில செய்திகள்

மூதாட்டியை தாக்கிய பெண் கைது

தினத்தந்தி
|
24 Sept 2023 12:15 AM IST

அத்தனூரில் மூதாட்டியை தாக்கிய பெண்ணை போலீசார் கைது செய்தனர்.

வெண்ணந்தூர்

வெண்ணந்தூர் அருகே உள்ள அத்தனூர் அண்ணா நகர் பகுதியை சேர்ந்தவர் முனியன் மனைவி ராமாயி (வயது 75). இவருடைய வீட்டின் பக்கத்தில் குடியிருப்பவர் கணேசன் மனைவி சின்ன பிள்ளை (41). இந்தநிலையில் ராமாயிக்கு சொந்தமான காலி இடத்தில் பப்பாளி மரம் வளர்த்து வந்துள்ளார். இது தொடர்பாக ராமாயி, சின்னபிள்ளை ஆகிய இருவருக்கும் அவ்வப்போது வாய் தகராறு ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. நேற்று காலை மீண்டும் வாய் தகராறு முற்றவே ராமாயியை, சின்னபிள்ளை கட்டையால் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் காயம் அடைந்த ராமாயி நாமக்கல் அரசு மருத்த்துவமனை மருத்துவ கல்லூரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து ராமாயி வெண்ணந்தூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். இதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சின்ன பிள்ளையை கைது செய்தனர்.

மேலும் செய்திகள்