< Back
மாநில செய்திகள்
மொபட் மீது மோட்டார் சைக்கிள் மோதி மூதாட்டி பலி
நாமக்கல்
மாநில செய்திகள்

மொபட் மீது மோட்டார் சைக்கிள் மோதி மூதாட்டி பலி

தினத்தந்தி
|
3 Oct 2023 12:19 AM IST

மோகனூர் அருகே மொபட் மீது மோட்டார் சைக்கிள் மோதி மூதாட்டி பரிதாபமாக இறந்தார்.

திருச்சி மாவட்டம் தொட்டியம் வட்டம், காட்டுபுத்தூர் அருகில் உள்ள காடுவெட்டியைச் சேர்ந்தவர் வினோத்குமார் (வயது 32). இவரது தாயார் பழனியம்மாள் (60). இவர்கள் இருவரும் சந்தைகளுக்கு சென்று காய்கறிகள் வியாபாரம் செய்து வருகின்றனர்.

இந்தநிலையில் நேற்றுமுன்தினம் நாமக்கல் மாவட்டம் வளையப்பட்டியில் நடைபெற்ற வாரச் சந்தைக்கு சென்று காய்கறி விற்பனை செய்து விட்டு, இரவு தனது மொபட்டில் வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது அரூர் மேடு பெட்ரோல் பங்க் அருகே சென்று கொண்டிருந்தபோது பின்னால் வந்த திருச்சி மாவட்டம், கிடாரத்தைச் சேர்ந்த ஆறுமுகம் மகன் மணிகண்டன் (29) என்பவர் மோட்டார் சைக்கிள் மொபட் மீது மோதியது. இதில் 3 பேரும் பலத்த காயம் அடைந்தனர். இதைபார்த்த அந்த வழியாக சென்றவர்கள் அவர்களை மீட்டு நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் பழனியம்மாள் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். தொடர்ந்து அவரது உடல் பிணவறையில் வைக்கப்பட்டது.

இதுகுறித்து வினோத்குமார் மோகனூர் போலீசில் புகார் கொடுத்தார். இதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் இளைய சூரியன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

மேலும் செய்திகள்