மின்சாதனப் பொருட்களை பராமரிப்பதன் அவசியம்
|மின் உபகரணங்களை குறிப்பிட்ட காலவரையறையில் சர்வீஸ் செய்ய வேண்டியது முக்கியம். ஒரு சாதனம் பழுதாவதற்கு முன்பே, அதன் இயக்கத்தை கவனத்தில் கொள்ள வேண்டும். இதனால் சிறிய மாற்றத்தையும் கண்டுபிடித்து, ஆரம்பத்திலேயே சரி செய்ய முடியும். புதிய உபகரணம் வாங்குவதற்கான செலவுகளையும் குறைக்க முடியும்.
மின்சாதனங்களை பாதுகாப்பான முறையில் கையாளாதபோது, ஆபத்துகளை சந்திக்க நேரிடலாம். அவற்றை கவனமாக பயன்படுத்துவதற்கான சில வழிமுறைகள் இதோ…
தேவையற்ற நேரங்களில் மின்சாதனங்களை, இணைப்பில் இருந்து துண்டித்துவிட வேண்டும். இதன் மூலம் அவை அதிக வெப்பமடைந்து விபத்து ஏற்படுவதைத் தவிர்க்க முடியும்.
மின்சாதனங்களை பயன்படுத்தும்போது மின் கசிவு ஏற்படுவதை உணர்ந்தால், உடனே மின்னியல் வல்லுனரை அணுகி சரி செய்ய வேண்டும். பழுதடைந்த மின்சாதனங்களை உபயோகப்படுத்துவதை தவிர்ப்பதே நல்லது.
மின் உபகரணங்களை குறிப்பிட்ட காலவரையறையில் சர்வீஸ் செய்ய வேண்டியது முக்கியம். ஒரு சாதனம் பழுதாவதற்கு முன்பே, அதன் இயக்கத்தை கவனத்தில் கொள்ள வேண்டும். இதனால் சிறிய மாற்றத்தையும் கண்டுபிடித்து, ஆரம்பத்திலேயே சரி செய்ய முடியும். புதிய உபகரணம் வாங்குவதற்கான செலவுகளையும் குறைக்க முடியும்.
மின்சாதனப் பொருட்களை வாங்கும்போது, அதில் குறிக்கப்பட்டிருக்கும் மின்சார பயன்பாட்டு அளவுகளை கருத்தில் கொள்ள வேண்டும். இது ஒரு மணி நேரத்தில் அவற்றால் பயன்படுத்தப்படும் மின்சாரத் தின் அளவாகும். இதை கருத்தில் கொண்டு மின்சாதனங்களை பயன்படுத்துவதன் மூலம், மின்சாரத்தை சேமித்து மின்கட்டணத்தைக் குறைக்க முடியும்.
வெளியூருக்கு செல்லும்போது மெயின் சுவிட்சை அணைத்து விட்டு செல்வது சிறந்தது. இதனால் எதிர்பாராத மின்கசிவு ஏற்படுவதைத் தவிர்க்கலாம்.
தரமான தயாரிப்புக் கொண்ட மின் உபகரணங்களை பயன்படுத்துவதன் மூலம் பாதுகாப்பு உறுதிசெய்யப்படுவதோடு, அவை சேதமடையாமல் நீடித்து உழைக்கவும் செய்யும். சேதமடைந்த மின்கம்பிகளை அவ்வப்போது சரிபார்த்து மாற்றி விடுவது நல்லது.
மின்சாதனங்களை சரியான கால இடைவெளியில் பழுதுநீக்கம் செய்வதன் மூலம் ஆபத்துகளை தவிர்த்து, அவற்றின் ஆயுட்காலத்தை நீட்டிக்கலாம்.
பழுதான மின் உபகரணங்களை தனிப்பட்ட முறையில், நீங்களாகவே சரி செய்ய முயற்சிப்பது ஆபத்தானது.