கிருஷ்ணகிரி
மின்சாரம் தாக்கி விவசாயி சாவு
|ரத்தினகிரி அருகே மின்சாரம் தாக்கி விவசாயி இறந்தார். இதுதொடர்பாக வாலிபர் கைது செய்யப்பட்டார்.
ராயக்கோட்டை
விவசாயி
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை தாலுகா ரத்தினகிரி அருகே உள்ள கோவிந்தப்பள்ளி கிராமத்தை சேர்ந்த பெருமாள் மகன் முனிராஜ் (வயது 34). விவசாயி. இவர் அப்பகுதியில் 2 ஏக்கர் நிலத்தில் நிலக்கடலை சாகுபடி செய்துள்ளார். நேற்று முன்தினம் இரவு அவரது நிலத்தை வனவிலங்குகள் சேதபடுத்தாமல் இருக்க காவலுக்கு சென்றார்.
இந்த நிலையில் நேற்று காலை முனிராஜ் அங்குள்ள முட்புதரில் மின்சாரம் தாக்கி இறந்து கிடப்பதாக பெருமாளுக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் பெருமாள் மற்றும் குடும்பத்தினர் சம்பவ இடத்துக்கு சென்று முனிராஜின் உடலை கண்டு கதறி அழுதனர்.
கைது
இதுகுறித்து கெலமங்கலம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். இந்த சம்பவம் தொடர்பாக பெருமாள் மஞ்சு (28) என்பவர் மின்சாரம் செலுத்தியதாக போலீசில் புகார் கொடுத்தார்.
அதன்பேரில் ராயக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜாபர் உசேன் வழக்குப்பதிவு செய்து அதே பகுதியை சேர்ந்த மஞ்சுவை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார். மேலும் சிலரை தேடி வருகிறார். மின்சாரம் தாக்கி இறந்த முனிராஜிக்கு அம்சா என்ற மனைவியும் 11 வயதியில் கோமதி என்ற மகளும், 8 வயதில் எமந்து என்ற மகன் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.