< Back
மாநில செய்திகள்
நாமக்கல்லில்பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டம்
நாமக்கல்
மாநில செய்திகள்

நாமக்கல்லில்பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டம்

தினத்தந்தி
|
6 Aug 2023 12:15 AM IST

காவிரி, சரபங்கா மற்றும் திருமணிமுத்தாறை இணைக்க வேண்டும் என்பது உள்பட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நாமக்கல் பூங்கா சாலையில் பா.ஜ.க. விவசாய அணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு நாமக்கல் கிழக்கு மாவட்ட விவசாய அணி தலைவர் செந்தில்வாசன் தலைமை தாங்கினார். கிழக்கு மாவட்ட தலைவர் சத்தியமூர்த்தி, மேற்கு மாவட்ட விவசாய அணி தலைவர் நடராஜன், விவசாய முன்னேற்ற கழக மாநில பொதுச்செயலாளர் பாலசுப்பிரமணியம், விவசாய அணியின் மாநில செயலாளர் ராதிகா, மாநில துணைத்தலைவர் சத்யபானு ஆகியோர் முன்னிலை வகித்து பேசினர். இதில் விவசாய அணி மாநில தலைவர் ஜி.கே.நாகராஜன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசியதாவது, பிரதமர் மோடியால் இந்தியா பொருளாதாரத்தில் 5-வது இடத்தில் உள்ளது. விரைவில் 3-வது இடத்திற்கு வரும். தொழிற்வளர்ச்சியில் ஒரு போதும் குறை வைக்கவில்லை. ஆனால் மாநில அரசு தொழிலை வளர்க்க சிப்காட்டிற்கு இடம் எடுக்கவில்லை. சாராயம் விற்பதில் காட்டும் அக்கறையை மக்கள் மீதும், விவசாயிகள் மீதும் தமிழ்நாடு அரசு காட்டுவதில்லை என்றார்.

அதைத்தொடர்ந்து நடந்த ஆர்ப்பாட்டத்தில் மோகனூர் அருகே சிப்காட் அமைக்கும் நடவடிக்கையை கைவிட வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. அப்போது பா.ஜ.க.வினர் மற்றும் சிப்காட் எதிர்ப்பு இயக்கத்தினர் தக்காளி, வெங்காயம் மற்றும் நிலக்கடலை செடிகள் மற்றும் கரும்புகளை கைகளில் ஏந்தியவாறு ஆடுகளுடன் நின்று முழக்கங்களை எழுப்பினர்.

இதில் பா.ஜ.க. மாவட்ட பொதுச்செயலாளர் முத்துக்குமார், ரவி, சேதுராமன், விவசாய அணி மாவட்ட துணைத் தலைவர்கள் வெங்கடாஜலம், ஜவகர், திட்ட பொறுப்பாளர் காளியப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்