மாதவிடாய் பிரச்சினைகளை நீக்கும் பதநீர்
|48 நாட்கள் பதநீரை தொடர்ந்து குடித்து வந்தால் வெள்ளைப்படுதல் பிரச்சினை குணமாகும். மாதவிடாய்க் கோளாறுகள் நீங்கும். பதநீரில் உள்ள நார்ச்சத்து, குடல் இயக்கத்தைச் சீராக்கி மலச்சிக்கல் ஏற்படுவதைத் தடுக்கும்.
பனை மரத்தில் இருந்து எடுக்கப்படும் பானம் 'பதனீர்'. உடலுக்கு குளிர்ச்சி தரும் பதநீரில் ஏராளமான நன்மைகள் இருக்கின்றன. இதில் புரதம், நார்ச்சத்து, சுண்ணாம்புச் சத்து, இரும்புச்சத்து, கால்சியம், பாஸ்பரஸ், தயமின், ரிபோபிளேவின், அஸ்கார்பிக் அமிலம் ஆகிய சத்துக்கள் நிறைந்துள்ளன.
அதிக உஷ்ணத்தால் ஏற்படும் நீர்க்கடுப்பு, சிறுநீர் வெளியேறும் பாதையில் வரக்கூடிய வலிகள், ஆறாத புண்கள், கொப்புளங்கள், ரத்தம் கலந்த வயிற்றுப்போக்கு, மூலச்சூடு ஆகியவற்றை குணப்படுத்தும் ஆற்றல் கொண்டது பதநீர். இதன் நன்மைகள் குறித்து மேலும் தெரிந்துகொள்வோம்.
பதநீரை, பழைய கஞ்சியுடன் சேர்த்துப் புளிக்க வைத்து ஆறாத புண்கள், கொப்புளங்கள் மீது தடவி வந்தால் நாளடைவில் குணமாகும்.
பதநீரில் உள்ள சுண்ணாம்புச்சத்து, எலும்புத் தேய்மானம் மற்றும் எலும்பு தொடர்பான பாதிப்புகள் வராமல் பாதுகாக்கும். பற்களை வலிமைப்படுத்தி, ஈறுகளில் ரத்தக்கசிவு ஏற்படுவதைத் தடுக்கும்.
48 நாட்கள் பதநீரை தொடர்ந்து குடித்து வந்தால் வெள்ளைப்படுதல் பிரச்சினை குணமாகும். மாதவிடாய்க் கோளாறுகள் நீங்கும்.
பதநீரில் உள்ள நார்ச்சத்து, குடல் இயக்கத்தைச் சீராக்கி மலச்சிக்கல் ஏற்படுவதைத் தடுக்கும்.
50 கிராம் வெந்தயத்தை லேசாக வறுத்து பொடி செய்துகொள்ளவும். 50 மி.லி. அளவு பதநீரை மிதமாக சூடுபடுத்தி, அதில் சிறிதளவு வெந்தயப் பொடியைச் சேர்த்து கலக்கி காலை-மாலை இரண்டு வேளையும் குடித்து வரவேண்டும். இதன்மூலம் ரத்தம் கலந்த வயிற்றுப்போக்கு, மூலச்சூடு போன்ற பிரச்சினைகள் குணமாகும்.
50 மி.லி. பதநீருடன், அரை தேக்கரண்டி மஞ்சள் கலந்து சாப்பிட்டால் வயிற்றுப்புண், தொண்டைப்புண், வெப்பக் கழிச்சல், சீதக் கழிச்சல் ஆகியவை நீங்கும்.