சுண்ணாம்பு மருத்துவம்
|சுண்ணாம்பு புகையின் நறுமணத்தை சுவாசிப்பதால், நாள்பட்ட இருமல், காசநோய் மற்றும் மார்பு சளி ஆகியவை குணமாகும்.
நம் வீட்டில் உள்ள முதியவர்கள் வெற்றிலை பாக்குடன் சிறிதளவு சுண்ணாம்பு சேர்த்து சாப்பிடுவார்கள். ஏனெனில் சுண்ணாம்பில் கால்சியம் சத்து நிறைந்துள்ளது. இது எலும்பின் வலிமையை அதிகரிக்கும். அதேபோல் வழிபாடு மற்றும் பிற புனித சடங்குகளில் சுண்ணாம்பை அதிகமாக பயன்படுத்துவார்கள். காரணம், சுண்ணாம்பில் ஆன்டிசெப்டிக், வலிநிவாரணி, மூச்சுத்திணறல் மற்றும் மன அழுத்தத்தை எதிர்க்கும் பண்புகள் நிறைந்துள்ளன. சுண்ணாம்பின் பயன்கள் பற்றி இங்கே தெரிந்துகொள்வோம்.
சுண்ணாம்பில் உள்ள மன அழுத்த எதிர்ப்பு பண்புகள், சுண்ணாம்பின் நறுமணத்தை சுவாசிப்பதன் மூலம் மன சோர்வு மற்றும் மன அழுத்தத்தைக் குறைக்கிறது.
சுண்ணாம்பு புகையின் நறுமணத்தை சுவாசிப்பதால், நாள்பட்ட இருமல், காசநோய் மற்றும் மார்பு சளி ஆகியவை குணமாகும். சுண்ணாம்பில் உள்ள புற்றுநோய் எதிர்ப்பு பண்புகள், உடலில் புற்றுநோய் செல்களின் வளர்ச்சியைத் தடுத்து, புற்றுநோயின் அறிகுறிகளைக் குறைக்கும்.
விஷப்பூச்சிகள் கடித்து விட்டால், சுண்ணாம்பு, மஞ்சள், உப்பு மூன்றையும் சம அளவு எடுத்து, நீர் சேர்த்து கரைத்து, கடித்த இடத்தில் தடவினால் விஷத்தன்மை நீங்கும். தேள் கடிக்கு சுண்ணாம்புடன் சிறிது நவச்சாரம் சேர்த்து நசுக்கி, அதை தேள் கொட்டிய இடத்தில் வைத்துத் தேய்த்தால் நஞ்சு இறங்கும்.
இரவு தூங்குவதற்கு முன்னர் தேனும், சிறிது சுண்ணாம்பும் கலந்த கலவையை தொண்டையில் தடவினால் தொண்டை வலி குறையும். சுண்ணாம்பு, துணி சுட்ட கரி, பனை வெல்லம் மூன்றையும் சமஅளவு எடுத்து, மைபோல் அரைத்து, வீக்கம் மற்றும் ரத்தக்கட்டு உள்ள இடத்தில் தடவ சரியாகும்.
உடலில் ஏற்படும் கட்டிகள் உடைய சுண்ணாம்பு, மாவலிங்கம் பட்டைத்தூள் இரண்டையும் சமஅளவு சேர்த்து நல்லெண்ணெய்யில் கலந்து தடவினால் கட்டிகள் பழுத்து உடையும்.
மஞ்சள் தூள், உப்பு, சுண்ணாம்பு மூன்றையும் குழைத்து நெற்றியில் தடவினால் தலைவலி நீங்கி, நல்ல தூக்கம் கிடைக்கும். தலையில் உள்ள அதிகப்படியான கெட்ட நீர் விலகிவிடும்.
¼ லிட்டர் தயிருடன் ஒரு கொட்டைப்பாக்கு அளவு சுண்ணாம்பு சேர்த்து தினமும் காலையில் மட்டும் சாப்பிட்டு வர மஞ்சள் காமாலை குணமாகும்.
ஒரு டம்ளர் தண்ணீரில் சிறிதளவு சுண்ணாம்பை கலந்து, அதில் மேலே தெளிந்த நீரை மட்டும் எடுத்து தேங்காய் எண்ணெய்யுடன் கலந்து, குழைத்து தடவி வர வெந்நீர் அல்லது நெருப்பினால் ஏற்பட்ட புண் ஆறும்.
சுண்ணாம்பை உமிழ்நீர் விட்டு குழைத்து, தொப்புளை சுற்றியும், கால் பெருவிரலிலும் தடவினால் நீர்க்கடுப்பு குணமாகும்.
குறிப்பு:
நீரிழிவு, ரத்த அழுத்தம் மற்றும் ஆஸ்துமா நோயாளிகள், அறுவை சிகிச்சை மேற்கொண்டவர்கள் சுண்ணாம்பு பயன்பாட்டைத் தவிர்க்க வேண்டும்.