< Back
ஆரோக்கியம் அழகு
வலியைக் குறைக்க உதவும் சாதனங்கள்
ஆரோக்கியம் அழகு

வலியைக் குறைக்க உதவும் சாதனங்கள்

தினத்தந்தி
|
23 July 2023 7:00 AM IST

கழுத்து மற்றும் தோள்பட்டை வலியால் சிரமப்படுபவர்களுக்கு ஏற்றது ஆர்த்தோபீடிக் தலையணை. இதைப் பயன்படுத்துவதன் மூலம் கழுத்து வலி, தோள்பட்டை வலி மற்றும் முதுகுத்தண்டு தொடர்பான பிரச்சினைகளைத் தவிர்க்க முடியும். இவ்வகை தலையணைகள் சீரான தூக்கத்துக்கு வழிவகுக்கும்.

ரே இடத்தில் நீண்ட நேரம் உட்கார்ந்து இருப்பது, நடக்கும்போதும், வேலைகளில் ஈடுபடும்போதும் சரியான தோரணையை பின்பற்றாதது உள்ளிட்ட காரணங்களால் உடலில் ஆங்காங்கே வலி உண்டாகும். இவற்றை குணப்படுத்த மருந்து, மாத்திரைகள் பல இருந்தாலும், அவற்றால் ஏற்படும் பக்கவிளைவுகளை பற்றியும் யோசிக்க வேண்டும். உடல் வலியைக் குறைத்து, தினசரி செயல்பாடுகளில் இயல்பாக ஈடுபடுவதற்கு உதவும் சில சாதனங்களைப் பற்றி இங்கே தெரிந்துகொள்வோம்.

ஸ்டிரெச்சர் டூல்:

முதுகு மற்றும் தோள்பட்டை வலியால் அவதிப்படுபவர்கள் இந்த ஸ்டிரெச்சர் டூலைப் பயன்படுத்தலாம். நீண்ட பலகையின் மேல், வளையும் தன்மை மற்றும் அக்குபிரஷர் புள்ளிகள் கொண்ட பிளாஸ்டிக் பலகை அமைக்கப்பட்டிருக்கும். உட்காரும்போதும், படுக்கும்போதும் இதை உபயோகிக்கலாம். பலகையின் வளைவு உயரத்தை நமது வசதிக்கு ஏற்றவாறு மாற்றிக்கொள்ளலாம். இதில் உள்ள அக்குபிரஷர் புள்ளிகள் முதுகுத் தசைகளில் உள்ள வலியைப் போக்கும். காலை-மாலை இரண்டு வேளையும் 5 நிமிடங்களுக்கு இதைப் பயன்படுத்தலாம்.

லம்பார் பேக் சப்போர்ட்:

வீட்டிலோ, அலுவலகத்திலோ, பயணம் செய்யும்போதோ நீங்கள் உட்காரப் பயன்படுத்தும் இருக்கைகளில் இந்த சாதனத்தைப் பொருத்திக்கொள்ளலாம். இதில் அமைக்கப்பட்டுள்ள உருண்டை வடிவ மணிகள், இடுப்பு மற்றும் முதுகுப் பகுதியில் மென்மையாக மசாஜ் செய்த பலனைத் தரும். இதில் உள்ள வலை அமைப்பு, முதுகுப் பகுதிக்கு காற்றோட்டத்தை கொடுக்கும். குறைவான எடை மற்றும் வசதியான வடிவமைப்பினை கொண்டிருப்பதால் எங்கு சென்றாலும் இதை எளிதாக உடன் எடுத்துச் செல்லலாம்.

பேக் குஷன்:

இந்த குஷன்களை நாம் அமரும் இருக்கையிலும், படுக்கையிலும் பயன்படுத்தலாம். முதுகுப் பகுதியில் வலி இருக்கும் இடத்தில் இதை வைத்துக் கொண்டு சாய்ந்து உட்காருவது அல்லது படுப்பதன் மூலம் வலி குறையும். சரியான தோரணையில் உட்காருவதற்கும், படுப்பதற்கும் இந்த குஷன் உதவியாக இருக்கும்.

ஆங்கிள் பெட் வெட்ஜ்:

முழங்கால்களை சப்போர்ட் செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள ஆங்கிள் பெட் வெட்ஜ், சூப்பர் சாப்ட் போம் மூலம் உருவாக்கப்பட்டது. இது முழங்கால் தசைகளின் வலியைக் குறைத்து காலில் ரத்த ஓட்டத்தை மேம்படுத்தும். முதுகு, கால் மற்றும் முழங்கால் பகுதிகளில் உண்டாகும் வலியைக் குறைக்க இதைப் பயன்படுத்தலாம்.

ஆர்த்தோபீடிக் தலையணைகள்:

கழுத்து மற்றும் தோள்பட்டை வலியால் சிரமப்படுபவர்களுக்கு ஏற்றது ஆர்த்தோபீடிக் தலையணை. இதைப் பயன்படுத்துவதன் மூலம் கழுத்து வலி, தோள்பட்டை வலி மற்றும் முதுகுத்தண்டு தொடர்பான பிரச்சினைகளைத் தவிர்க்க முடியும். இவ்வகை தலையணைகள் சீரான தூக்கத்துக்கு வழிவகுக்கும்.

லம்பார் சப்போர்ட் பில்லோ:

இவ்வகை தலையணைகள் முதுகுத்தண்டின் நெகிழ்வுத் தன்மை, உடலின் தோரணை, உடல் அமைப்பு ஆகியவற்றை மேம்படுத்த உதவும். இவற்றை உபயோகிப்பதால் இடுப்பு மற்றும் முதுகுத்தண்டில் ஏற்படும் வலி குறையும். நீண்ட நேரம் உட்கார்ந்தபடி வேலை செய்வதால் ஏற்படும் தசைப்பிடிப்பு நீங்கும்.

குறிப்பு: அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்கள், எலும்பு புரை பிரச்சினையால் பாதிக்கப்பட்டவர்கள், எலும்பு முறிவு ஏற்பட்டவர்கள், அதீத முகுது வலியால் சிரமப்படுபவர்கள் மருத்துவரின் ஆலோசனையைப் பெற்று இவற்றைப் பயன்படுத்தலாம்.

மேலும் செய்திகள்