< Back
உணவு
கிராமத்து ஸ்டைல் முருங்கைக்கீரை குழம்பு
உணவு

கிராமத்து ஸ்டைல் முருங்கைக்கீரை குழம்பு

தினத்தந்தி
|
3 Sept 2023 7:00 AM IST

சுவையான முருங்கைக்கீரை குழம்பு, தேங்காய்ப்பால் ரசம் ஆகியவற்றின் செய்முறை விளக்கத்தை இங்கே பார்க்கலாம்.

கிராமத்து ஸ்டைல் முருங்கைக்கீரை குழம்பு

தேவையான பொருட்கள்:

மசாலா அரைக்க:

மிளகு - 2 டீஸ்பூன்

சீரகம் - 2 டீஸ்பூன்

தேங்காய் - 2 டேபிள் ஸ்பூன் (துருவியது)

காய்ந்த மிளகாய் - 3

கடலைப்பருப்பு - 1 டேபிள் ஸ்பூன்

குழம்பு தயாரிக்க:

பாசிப்பருப்பு - 3 டேபிள் ஸ்பூன்

முருங்கைக்காய் - 1

கத்தரிக்காய் - 3

முருங்கைக்கீரை - இரண்டு கைப்பிடி அளவு

கொத்தமல்லித்தழை - சிறிதளவு

மஞ்சள்தூள் - ¼ டீஸ்பூன்

உப்பு - தேவையான அளவு

தாளிக்க:

கடுகு - ¼ டீஸ்பூன்

உளுத்தம் பருப்பு - ¼ டீஸ்பூன்

பெருங்காயப்பொடி - 2 சிட்டிகை

கறிவேப்பிலை - சிறிதளவு

எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை:

அடுப்பில் வாணலியை வைத்து சூடானதும் அதில் மிளகு, சீரகம், காய்ந்த மிளகாய், கடலைப்பருப்பு ஆகியவற்றை ஒவ்வொன்றாகப் போட்டு மிதமான தீயில் சிவக்க வறுத்து ஆற வைக்கவும். பின்பு இவற்றுடன் தேங்காய் சேர்த்து மிக்சியில் போட்டு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி பசைபோல அரைத்துக்கொள்ளவும்.

மற்றொரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் தண்ணீர் ஊற்றி பாசிப்பருப்பு சேர்த்து வேகவைக்கவும். பாதி அளவு வெந்ததும் அதனோடு முருங்கைக்காய், கத்தரிக்காய் ஆகியவற்றை சேர்த்து வேகவைக்கவும். அவை முக்கால் பதத்துக்கு வெந்ததும், முருங்கைக்கீரையை அதனுடன் சேர்த்து வேகவைக்கவும். பின்பு அதில் அரைத்து வைத்திருக்கும் மசாலா, மஞ்சள்தூள், உப்பு சேர்த்து கலந்து நன்றாகக் கொதிக்க வைக்கவும். பின்னர் கொத்தமல்லித்தழையை அதன் மேலே தூவவும்.

சிறிய வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடுபடுத்தவும். பின்பு அதில் கடுகு, உளுத்தம் பருப்பு, பெருங்காயத்தூள், கறிவேப்பிலை போட்டுத் தாளிக்கவும். இதை தயாரித்து வைத்திருக்கும் குழம்பில் ஊற்றி கலக்கவும். இப்போது சுவையான 'முருங்கைக்கீரை குழம்பு' தயார்.

தேங்காய்ப்பால் ரசம்

தேவையான பொருட்கள்:

மிளகு - 1 டீஸ்பூன்

சீரகம் - 1½ டீஸ்பூன்

வெந்தயம் - ¼ டீஸ்பூன்

தேங்காய்ப்பால் - ½ லிட்டர்

நெய் - 1 டேபிள் ஸ்பூன்

கடுகு - ½ டீஸ்பூன்

பெருங்காயத்தூள் - ½ டீஸ்பூன்

இஞ்சி - 1 டீஸ்பூன் (துருவியது)

தக்காளி - 1 (பொடிதாக நறுக்கியது)

உப்பு - 1 டீஸ்பூன்

வெல்லம் - 2 டீஸ்பூன்

கொத்தமல்லித்தழை - சிறிதளவு

கறிவேப்பிலை - சிறிதளவு

செய்முறை:

அடுப்பில் வாணலியை வைத்து சூடானதும் அதில் மிளகு, 1 டீஸ்பூன் சீரகம், வெந்தயம் ஆகியவற்றை ஒவ்வொன்றாகப் போட்டு மிதமான தீயில் சிவக்க வறுக்கவும். அது ஆறியதும் மிக்சியில் போட்டு பொடித்துக்கொள்ளவும்.

வாணலியை அடுப்பில் வைத்து அதில் நெய் ஊற்றி சூடுபடுத்தவும். பின்பு கடுகு, சீரகம், பெருங்காயம் போட்டு தாளிக்கவும். பிறகு அதில் இஞ்சி, தக்காளி மற்றும் உப்பு சேர்த்து நன்றாக வதக்கவும்.

பின்னர் அந்தக் கலவையில் தேங்காய்ப்பாலை ஊற்றி மிதமான தீயில் கலக்கவும். அது நுரை வந்து லேசாகக் கொதிக்க ஆரம்பித்ததும் அதில் கறிவேப்பிலை மற்றும் கொத்தமல்லித்தழை தூவி அடுப்பில் இருந்து இறக்கவும்.

மேலும் செய்திகள்