< Back
உணவு
வெஜ் அடை ரோஸ்ட்
உணவு

வெஜ் அடை ரோஸ்ட்

தினத்தந்தி
|
11 Jun 2023 7:00 AM IST

சுவையான வெஜ் அடை ரோஸ்ட், மல்டி வெஜ் புரோட்டீன் சாலட் ஆகியவற்றின் செய்முறை விளக்கத்தை இங்கே பார்க்கலாம்

வெஜ் அடை ரோஸ்ட்

தேவையான பொருட்கள்:

பச்சரிசி - 1 கப்

தயிர் - ½ கப்

உருளைக்கிழங்கு - 2

கேரட் - 1

குடைமிளகாய் - 1

வெங்காயம் - 1

இஞ்சி விழுது - 1 டீஸ்பூன்

சீரகம் - 1 டீஸ்பூன்

மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்

கொத்தமல்லித் தழை - 1 கைப்பிடி

பேக்கிங் சோடா - ½ டீஸ்பூன்

உப்பு - தேவைக்கு

எண்ணெய் - 3 டீஸ்பூன்

செய்முறை:

அரிசியை சுத்தம் செய்த பின், தேவையான அளவு தண்ணீர் ஊற்றி இரண்டு மணி நேரம் ஊறவைக்கவும். பிறகு தண்ணீரை வடிகட்டி, அரிசியை மிக்சி ஜாரில் போடவும். அதனுடன் தயிர் சேர்த்து கெட்டியாக அரைத்துக்கொள்ளவும். இந்த மாவுடன் வேகவைத்து மசித்த உருளைக்கிழங்கு, துருவிய கேரட், மெல்லியதாக நறுக்கிய வெங்காயம் மற்றும் குடைமிளகாய் ஆகியவற்றை சேர்த்து நன்றாகக் கலக்கவும். பின்பு அதில் இஞ்சி விழுது, சீரகம், மிளகாய்த்தூள், பேக்கிங் சோடா, உப்பு, கொத்தமல்லித் தழை ஆகியவற்றை போட்டு கலக்கவும். இந்தக் கலவை அடை மாவு பதத்தில் இருக்க வேண்டும். இதை 5 நிமிடங்களுக்கு அப்படியே மூடி வைக்கவும். பின்னர் அடுப்பில் தோசைக்கல்லை வைத்து அது சூடானதும், அதில் மாவை சிறு சிறு அடைகளாக ஊற்றி இரண்டு பக்கமும் பொன்னிறமாக ரோஸ்ட் செய்து எடுக்கவும். இதை உங்களுக்கு விருப்பமான சட்னியுடன் சேர்த்து சாப்பிடலாம்.

மல்டி வெஜ் புரோட்டீன் சாலட்

தேவையான பொருட்கள்:

வெள்ளரிக்காய் - 1

கேரட் - 1

தக்காளி - 1

வெங்காயம் - 1

குடைமிளகாய் - 1

எலுமிச்சம்பழம் - 1

பச்சை மிளகாய் - 2

கொத்தமல்லித் தழை - 1 கைப்பிடி

சாட் மசாலா - ½ டீஸ்பூன்

சீரகத்தூள் - ½ டீஸ்பூன்

மிளகுத்தூள் - ½ டீஸ்பூன்

பிளாக் சால்ட் - ½ டீஸ்பூன்

உப்பு - தேவையான அளவு

ஊற வைத்த கொண்டைக்கடலை - 1 கப்

ஓமப்பொடி - 1 கரண்டி (சுவைக்காக)

செய்முறை:

கொண்டைக்கடலையை சிறிது உப்பு போட்டு வேகவைத்து வடிகட்டிக்கொள்ளவும். காய்கறிகள் அனைத்தையும் சுத்தம் செய்து ஒரே வடிவத்தில் பொடிதாக நறுக்கிக்கொள்ளவும். பின்னர் ஒரு பெரிய கிண்ணத்தில் கொண்டைக்கடலை, காய்கறிகள் ஆகியவற்றை போட்டு கலக்கவும். பிறகு அதில் சாட் மசாலா, சீரகத்தூள், மிளகுத்தூள், பிளாக் சால்ட், பொடிதாக நறுக்கிய கொத்தமல்லித்தழை, உப்பு, எலுமிச்சம் பழச்சாறு ஆகியவற்றை ஒவ்வொன்றாகப் போட்டு, நன்றாகக் கலக்கவும். அதன் மேல் ஓமப்பொடி தூவி பரிமாறவும்.

மேலும் செய்திகள்