மாங்காய் பச்சடி
|சுவையான மாங்காய் பச்சடி மற்றும் மாங்காய் சட்னி செய்முறைகளை தெரிந்து கொள்வோம்
தேவையான பொருட்கள்:
மாங்காய் - 2
கடுகு - 2 தேக்கரண்டி
உளுந்து - 1 தேக்கரண்டி
பெருங்காயம் - ½ தேக்கரண்டி
காய்ந்த மிளகாய் - 3
பச்சை மிளகாய் - 1
மஞ்சள் தூள் - ½ தேக்கரண்டி
மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி
வெல்லம் - 150 கிராம்
கறிவேப்பிலை - சிறிதளவு
நல்லெண்ணெய் - 4 தேக்கரண்டி
தண்ணீர் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
ஒரு பாத்திரத்தில் சிறிதளவு தண்ணீர் ஊற்றி, அதில் வெல்லத்தைப் போட்டு கரையும் வரை சூடுபடுத்தவும். பின்பு, அதை வடிகட்டி தனியாக வைத்துக் கொள்ளவும்.
அடிகனமான வாணலியில் நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுந்து, காய்ந்த மிளகாய், நறுக்கிய பச்சை மிளகாய், கருவேப்பிலை மற்றும் பெருங்காயம் போட்டு வதக்கவும். பின்னர் வெட்டிய மாங்காய் துண்டுகள், மஞ்சள் தூள், மிளகாய்த் தூள் கலந்து 5 நிமிடங்கள் வதக்கவும். பின்பு அதில் வெல்ல தண்ணீர் சேர்த்து கலக்கவும். கலவை கெட்டியாகும் வரை நன்றாக கிளறவும். இப்பொழுது சுவையான 'மாங்காய் பச்சடி' தயார்.
மாங்காய் சட்னி
தேவையான பொருட்கள்:
மாங்காய் - 1
காய்ந்த காஷ்மீரி மிளகாய் - 8
தனியா - 2 தேக்கரண்டி
கடலைப்பருப்பு - 3 தேக்கரண்டி
உளுந்து - 1 தேக்கரண்டி
வெந்தயம் - ½ தேக்கரண்டி
சீரகம் - 1 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - 1 தேக்கரண்டி
கடுகு - 1 தேக்கரண்டி
கறிவேப்பிலை - சிறிதளவு
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
வாணலியில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி சூடானதும், அதில் 5 காய்ந்த மிளகாய், கடலைப்பருப்பு, சீரகம், வெந்தயம், உளுந்து, தனியா ஆகியவற்றை ஒன்றன் பின் ஒன்றாக போட்டு மிதமான தீயில் பொன்னிறமாக வறுக்கவும்.
மிக்சியில் விதை நீக்கி வெட்டிய மாங்காய், வறுத்த மசாலா மற்றும் உப்பு சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
மற்றொரு வாணலியில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி சூடானதும், அதில் கடுகு, உளுந்து, 3 காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை, அரைத்த மாங்காய் விழுது மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து தாளித்து இறக்கவும். இப்போது சுவையான மாங்காய் சட்னி தயார். இதை சூடான சாதத்துடன் சேர்த்துப் பரிமாறவும்.