கர்நாடக ஸ்பெஷல் கார பொங்கல்
|சூடான கர்நாடக ஸ்பெஷல் கார பொங்கலுடன் தேங்காய் சட்னி சேர்த்துப் பரிமாறலாம்.
கர்நாடக ஸ்பெஷல் கார பொங்கல்
தேவையான பொருட்கள்:
பச்சரிசி - 4 கப்
பாசிப்பருப்பு - ¾ கப்
தண்ணீர் - 5 கப்
முந்திரி பருப்பு - 10
சீரகம் - ¾ டீஸ்பூன்
மிளகு - ¼ டீஸ்பூன்
மிளகுத்தூள் - ½ டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 2
இஞ்சி - 1 அங்குல துண்டு
பூண்டு - 5 பல்
துருவிய தேங்காய் - ¼ கப்
மஞ்சள் தூள் - ¼ டீஸ்பூன்
நெய் - 4 டீஸ்பூன்
எண்ணெய் - 4 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
அரிசி மற்றும் பருப்பை நன்றாக சுத்தம் செய்து, தண்ணீர் ஊற்றி 30 நிமிடங்கள் ஊற வைக்கவும்.
பின்பு அதில் உப்பு மற்றும் மஞ்சள் தூள் கலந்து குக்கரில் 4 விசில் வரும் வரை வேக வைக்கவும்.
பின்னர் வாணலியில் எண்ணெய் மற்றும் நெய் ஊற்றி சூடானதும் முந்திரி, தேங்காய், பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு, சீரகம், மிளகுத்தூள், மிளகு ஆகியவற்றை ஒவ்வொன்றாக சேர்த்து நன்றாக வறுக்கவும்.
இதை வேகவைத்த அரிசிக் கலவையுடன் கலந்தால் சுவையான 'கார பொங்கல்' தயார். பொங்கல் கெட்டியாக இல்லாமல் சற்று இளகியதாக இருக்க வேண்டும்.
சூடான பொங்கலுடன் தேங்காய் சட்னி சேர்த்துப் பரிமாறலாம்.
கோவில் சர்க்கரை பொங்கல்
தேவையான பொருட்கள்:
பச்சரிசி - ½ கப்
தண்ணீர் - 3 கப்
வெல்லம் - ¾ கப்
முந்திரி பருப்பு - 10
உலர் திராட்சை - சிறிதளவு
நெய் - 4 டீஸ்பூன்
பச்சைக் கற்பூரம் - ஒரு சிட்டிகை
ஏலக்காய் பொடி - ¼ டீஸ்பூன்
செய்முறை:
பச்சரிசியை நன்றாக சுத்தம் செய்து 3 கப் தண்ணீர் ஊற்றி 5 அல்லது 6 விசில் வரும் வரை வேக வைக்கவும். குழைந்த பதத்தில் இருக்க வேண்டும்.
இதற்கிடையில், ஒரு பாத்திரத்தில் வெல்லத்தைப் போட்டு ½ கப் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைத்து வடிகட்டிக் கொள்ளவும்.
பின்பு வேகவைத்த அரிசியை, கரண்டியின் பின்புறத்தை வைத்து நன்றாக மசித்துக் கொள்ளவும்.
அதில் வெல்லப்பாகை ஊற்றி நன்றாகக் கலக்கவும். பின்னர் பச்சைக் கற்பூரம், ஏலக்காய் பொடி மற்றும் நெய் சேர்த்துக் கலக்கவும்.
பிறகு முந்திரி மற்றும் உலர் திராட்சையை, நெய்யில் பொன்னிறமாக வறுத்து பொங்கலில் சேர்த்துக் கலக்கவும். இப்போது சுவையான 'கோவில் சர்க்கரை பொங்கல்' தயார்.