< Back
உணவு
வெளிநாட்டு ஸ்பெஷல் சாய் லேட்
உணவு

வெளிநாட்டு ஸ்பெஷல் சாய் லேட்

தினத்தந்தி
|
8 Oct 2023 7:00 AM IST

சுவையான சாய் லேட், கிரீன் டீ ஐஸ் கிரீம் ஆகியவற்றின் செய்முறை விளக்கத்தை இங்கே பார்க்கலாம்

வெளிநாட்டு ஸ்பெஷல் சாய் லேட்

தேவையான பொருட்கள்:

பால் - 2 கப்

தண்ணீர் - 2 கப்

மிளகு - 10

ஏலக்காய் - 5

கிராம்பு - 5

லவங்கப்பட்டை - 1 துண்டு

இஞ்சி - 1 அங்குல துண்டு

பிரவுன் சுகர் - (பதப்படுத்தப்படாத சர்க்கரை) - 2 டேபிள் ஸ்பூன்

பிளாக் டீ - 2 டேபிள் ஸ்பூன்

செய்முறை:

ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி மிதமான தீயில் சூடுபடுத்துங்கள். மிளகு, ஏலக்காய், கிராம்பு, லவங்கப்பட்டை ஆகியவற்றை பொடித்துக் கொள்ளுங்கள். இஞ்சியை அரைத்து வைத்துக்கொள்ளுங்கள். இவை அனைத்தையும் அந்த தண்ணீரில் போட்டு, சர்க்கரை கலந்து 8 முதல் 10 நிமிடங்கள் வரை கொதிக்க வைத்து, பின் வடிகட்டுங்கள். மற்றொரு பாத்திரத்தில் பிளாக் டீயை கொதிக்க வைத்து வடிகட்டி எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். பாலை தனியாக காய்ச்சிக் கொள்ளுங்கள். அது ஆறியதும் பிளண்டர் கொண்டு நன்றாக நுரை வரும் வரை அடித்துக்கொள்ளுங்கள். இதனுடன் வடிகட்டி வைத்திருக்கும் டீ மற்றும் மசாலா டிகாஷனை ஊற்றி கலக்குங்கள். இதை ஒரு கோப்பையில் ஊற்றி அதன் மேல் லவங்கப்பட்டைத் தூளை தூவுங்கள். இப்போது சுவையான 'சாய்லேட்' தயார்.

கிரீன் டீ ஐஸ் கிரீம்

தேவையான பொருட்கள்:

பால் (கொழுப்பு நீக்காதது) - 400 மி.லி.

பிரஷ் கிரீம் - 300 மி.லி.

முட்டை - 6

கஸ்டர்டு சுகர் - ½ கப்

கிரீன் டீ தூள் - 20 கிராம்

செய்முறை:

அடிகனமான அகன்ற பாத்திரத்தில் பாலையும், பிரஷ் கிரீமையும் ஊற்றி மிதமான தீயில் கலக்குங்கள். அது லேசாக சூடானதும் அடுப்பில் இருந்து இறக்குங்கள். மற்றொரு பாத்திரத்தில் கஸ்டர்டு சுகருடன், முட்டைகளை உடைத்து ஊற்றி நன்றாக அடித்து கலக்குங்கள். பின்பு அதனுடன் கிரீன் டீ தூளை சேர்த்துக் கொள்ளுங்கள்.

அதன் பின்னர் இதில் கொஞ்சம் கொஞ்சமாக பாலை ஊற்றி நன்றாக அடித்துக் கலக்குங்கள். இந்தக் கலவையை வடிகட்டிக்கொள்ளுங்கள். இதை அடிகனமான அகன்ற பாத்திரத்தில் ஊற்றி மிதமான தீயில் கிளறுங்கள். கலவை கெட்டியாகத் தொடங்கியதும் அடுப்பில் இருந்து இறக்கி ஆற வையுங்கள். பின்பு அதை ஒரு பவுலில் ஊற்றி குளிர்சாதனப் பெட்டியில் வையுங்கள். ஒரு மணி நேரம் கழித்து வெளியே எடுத்து ஐஸ் கிரீம் தயாரிக்கும் இயந்திரத்தில் போட்டு அடித்துக்கொள்ளுங்கள். பிறகு அதை மீண்டும் பவுலில் ஊற்றி குளிர்சாதனப் பெட்டியின் பிரீசர் அறையில் வையுங்கள். 2 மணி நேரம் கழித்து வெளியே எடுத்துப் பரிமாறுங்கள்.

மேலும் செய்திகள்