கப் பீட்சா
|வீட்டில் சப்பாத்தி மீதமாகி விட்டதா? அதைக்கொண்டு குழந்தைகள் விரும்பி சாப்பிடும் ‘கப் பீட்சா’ தயாரிப்பது எப்படி என்று இங்கு பார்ப்போம்.
கப் பீட்சா
தேவையான பொருட்கள்:
சப்பாத்தி - 4
எண்ணெய் - 2 கப்
மொசரில்லா சீஸ் (துருவியது) - 1 கப்
சில்லி பிளேக்ஸ் - 2 டீஸ்பூன்
பீட்சா சாஸ் - 4 டீஸ்பூன்
ஓரிகானோ - 2 டீஸ்பூன்
மிளகுத்தூள் - 1 டீஸ்பூன்
ஆலிவ் பழம் - 5
குடைமிளகாய் (பொடிதாக நறுக்கியது) - 2 டீஸ்பூன்
வெங்காயம் (பொடிதாக நறுக்கியது) - 2 டீஸ்பூன்
செய்முறை:
ஒரு நீண்ட எவர்சில்வர் டம்ளரின் வெளிப்பகுதி முழுவதும் சிறிதளவு எண்ணெய் தடவி, அதன் மேல் சப்பாத்தியை நூல் கொண்டு கட்டுங்கள்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் டம்ளரை அதில் போட்டு, சப்பாத்தி பொன்னிறமாக மாறும்வரை பொரித்து எடுங்கள். சூடு ஆறிய பிறகு டம்ளரில் இருந்து சப்பாத்தியை பிரித்து எடுக்கலாம்.
கிண்ணம் போல இருக்கும் சப்பாத்தியின் உள்ளே சீஸ், குடைமிளகாய், வெங்காயம், பீட்சா சாஸ் என ஒவ்வொன்றாக நிரப்பவும். அதன்மேல் மிளகுத்தூள், சில்லி பிளேக்ஸ், ஓரிகானோ ஆகியவற்றைத் தூவி ஆலிவ் பழம் கொண்டு அலங்கரிக்கவும்.
அடுப்பில் தவாவை வைத்து சூடானதும், தயார் செய்த சப்பாத்தியை அதன் மேல் வைத்து மூடி 15 நிமிடங்கள் வரை 'பேக்' செய்தால் 'கப் பீட்சா' தயார்.