< Back
உணவு
பேபி கார்ன் 65
உணவு

பேபி கார்ன் 65

தினத்தந்தி
|
22 Jan 2023 7:00 AM IST

சுவையான பேபி கார்ன் 65 மற்றும் பேபி கார்ன் சூப் ஆகியவற்றின் செய்முறை விளக்கத்தை இங்கே பார்க்கலாம்

பேபி கார்ன் 65

தேவையான பொருட்கள்:

பேபி கார்ன் - 8

கோதுமை மாவு அல்லது

மைதா - 2 டேபிள் ஸ்பூன்

அரிசி மாவு - 2 டேபிள் ஸ்பூன்

சோள மாவு - 1 டேபிள் ஸ்பூன்

தயிர் - 3 டேபிள் ஸ்பூன்

இஞ்சி பூண்டு விழுது - 1 டேபிள் ஸ்பூன்

மிளகாய்த்தூள் - 1 டேபிள் ஸ்பூன்

கரம் மசாலா பொடி - 1 டீஸ்பூன்

எலுமிச்சம் பழச்சாறு - 1 டீஸ்பூன்

கறிவேப்பிலை - ஒரு கைப்பிடி

உப்பு - தேவைக்கு

தண்ணீர் - தேவைக்கு

எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு

செய்முறை:

பேபி கார்னை நீளவாக்கில் நறுக்கி, பிறகு சிறு சிறு துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும். இவற்றை கொதிக்கும் தண்ணீரில் போட்டு 2 நிமிடங்கள் கழித்து வடிகட்டி எடுத்துக்கொள்ளவும்.

அகலமான பாத்திரத்தில் கோதுமை மாவு அல்லது மைதா, அரிசி மாவு, சோள மாவு, தயிர், இஞ்சி பூண்டு விழுது, மிளகாய்த்தூள், கரம் மசாலா பொடி, உப்பு ஆகியவற்றை ஒவ்வொன்றாகப் போட்டு நன்றாகக் கலக்கவும். இதில் சிறிது சிறிதாக தண்ணீர் ஊற்றி, இட்லி மாவு பதத்தில் கட்டி இல்லாமல் கலந்துகொள்ளவும். கடைசியாக எலுமிச்சம் பழச்சாறு ஊற்றி கலக்கவும்.

பேபி கார்ன் துண்டுகளை இந்த மாவில் போட்டு, நன்றாகப் புரட்டிக்கொள்ளவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும், மிதமான தீயில் பேபி கார்ன் துண்டுகளைப் போட்டு, பொன்னிறமாக வறுத்து எடுக்கவும்.

அதே எண்ணெய்யில் கறிவேப்பிலையைப் போட்டு மொறுமொறுப்பாக வறுத்து, பொரித்த பேபி கார்ன் துண்டுகளுடன் கலக்கவும். இப்போது சுவையான 'பேபிகார்ன் 65' ரெடி.

பேபி கார்ன் சூப்:

தேவையான பொருட்கள்

பேபி கார்ன் - 6

இஞ்சி (பொடிதாக நறுக்கியது) - 1 டீஸ்பூன்

பூண்டு (பொடிதாக நறுக்கியது) - 1 டீஸ்பூன்

பச்சை மிளகாய் (பொடிதாக நறுக்கியது) - 1 டீஸ்பூன்

கொத்தமல்லித்தழை

(பொடிதாக நறுக்கியது) - 1 டேபிள் ஸ்பூன்

முட்டைக்கோஸ் (பொடிதாக நறுக்கியது) - 2 டேபிள் ஸ்பூன்

குடைமிளகாய் (பொடிதாக நறுக்கியது) - 2 டேபிள் ஸ்பூன்

காளான் (பொடிதாக நறுக்கியது) - 2 டேபிள் ஸ்பூன்

மிளகுத்தூள் - 1 டீஸ்பூன்

சோளமாவு - 2 டேபிள் ஸ்பூன்

தண்ணீர் - 5 கப்

எண்ணெய் - தேவைக்கு

உப்பு - தேவைக்கு

செய்முறை:

பேபி கார்னை நீளவாக்கில் நறுக்கிக்கொள்ளவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய், கொத்தமல்லித்தழை ஆகியவற்றை ஒவ்வொன்றாகப் போட்டு 2 நிமிடம் வதக்கவும். பின்பு அதில் பேபி கார்ன், குடைமிளகாய், காளான், மிளகுத்தூள், உப்பு ஆகியவற்றைப் போட்டு மேலும் 3 நிமிடங்கள் வதக்கவும்.

பின்னர் அதில் 4 கப் தண்ணீர் ஊற்றி கலந்து நன்றாகக் கொதித்தவுடன் தீயைக் குறைக்கவும். சோளமாவை 1 கப் தண்ணீரில் கட்டியில்லாமல் கரைக்கவும். அதை பேபி கார்ன் கலவையில் ஊற்றி, சூப் நன்றாகக் கொதித்து கெட்டியாகும் வரை கிளறவும். பின்னர் அதில் முட்டைக்கோஸைப் போட்டுக் கிளறி இறக்கவும்.

இப்போது சூடான பேபி கார்ன் சூப் தயார்.

மேலும் செய்திகள்