< Back
வாழ்க்கை முறை
சருமத்தை பளபளப்பாக்கும் ஆலிவ் எண்ணெய்
வாழ்க்கை முறை

சருமத்தை பளபளப்பாக்கும் ஆலிவ் எண்ணெய்

தினத்தந்தி
|
6 Jun 2022 5:30 AM GMT

ஆலிவ் எண்ணெய்யில் ஒலிக் அமிலம் மற்றும் ஸ்குவாலீன் போன்ற ஆன்டி-ஆக்சிடண்டுகள் உள்ளன. இவை சருமம் விரைவாக முதிர்ச்சி அடைவதைத் தடுக்கின்றன.

ருமத்தின் பொலிவைப் பாதுகாப்பதில் உடலில் இயற்கையாக சுரக்கும் எண்ணெய்ப்பசை முக்கிய பங்காற்றுகிறது. இதன் ரசாயனத் தன்மையோடு பொருந்தக்கூடியது ஆலிவ் எண்ணெய். இதைத் தொடர்ந்து பயன்படுத்துவதால் சருமத்தின் பளபளப்பு அதிகரிக்கும். பிளாக்ஹெட்ஸ், ஒயிட்ஹெட்ஸ் போன்ற சருமப் பிரச்சினைகள் நீங்கும்.

ஆன்டி-ஆக்சிடண்டுகள்:

ஆலிவ் எண்ணெய்யில் ஒலிக் அமிலம் மற்றும் ஸ்குவாலீன் போன்ற ஆன்டி-ஆக்சிடண்டுகள் உள்ளன. இவை சருமம் விரைவாக முதிர்ச்சி அடைவதைத் தடுக்கின்றன.

மாய்ஸ்சுரைசர்:

ஆலிவ் எண்ணெய்யில் இருக்கும் கொழுப்பு அமிலங்கள் இயற்கையான மாய்ஸ்சுரைசராக செயல்படுகிறது. இது சருமத்தின் நெகிழ்ச்சித் தன்மையைப் பராமரிக்கும். சருமத்தை மென்மையாகவும், மிருதுவாகவும், பளபளப்பாகவும் மாற்றும். சருமம் வறண்டுபோகாமல் தடுக்கும்.

சரும பிரச்சினைகளை நீக்குதல்:

ஆலிவ் எண்ணெய் பிளாக்ஹெட்ஸ் மற்றும் ஒயிட்ஹெட்ஸ் போன்ற சரும பிரச்சினைகளுக்கு இயற்கையான மருந்தாகும். இதை முகத்தில் பூசி மென்மையாக மசாஜ் செய்வதன் மூலம், சருமத்துளைகள் திறந்து, மேற்கண்ட பிரச்சினைகள் எளிதில் நீங்கும். வடுக்கள் மற்றும் முகப் பருக்களால் ஏற்படும் அடையாளங்கள் மறையும். சருமம், மாசு மருவின்றி பள

பளப்பாகக் காட்சி தரும்.

ஆலிவ் எண்ணெய்யில் இருக்கும் வைட்டமின் ஈ, பிளேவனாய்டுகள் மற்றும் பாலிபீனால்கள் சரும செல்களின் வளர்ச்சியை மேம்படுத்துகிறது. பாக்டீரியாக்கள், பூஞ்சைகள் மற்றும் வைரஸ்கள் போன்ற கிருமிகளுக்கு எதிராகச் செயல்பட்டு தோல் பிரச்சினைகளை குணமாக்குகிறது.

அழற்சியைக் குறைத்தல்:

ஆலிவ் எண்ணெய்யின் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உடலின் வெளிப்புற மற்றும் உட்புற அழற்சிகளுக்குச் சிகிச்சையளிக்கப் பயன்படுகிறது. அழகு சிகிச்சைக்காக 'எக்ஸ்ட்ரா வெர்ஜின்' ஆலிவ் எண்ணெய் எனும் சுத்திகரிக்கப்படாத எண்ணெய் பயன்படுத்துவதே நல்லது.

ஆலிவ் எண்ணெய் மசாஜ் செய்யும் முறை:

தேவையானவை:

எக்ஸ்ட்ரா வெர்ஜின் ஆலிவ் எண்ணெய் - 1 தேக்

கரண்டி, மென்மையான பருத்தி துணி, வெந்நீர்

செய்முறை:

உங்கள் விரல் நுனியைப் பயன்படுத்தி, வட்ட இயக்கத்தில் முகத்தில் ஆலிவ் எண்ணெய்யால் மசாஜ் செய்யவும். மூக்கு, கன்னங்கள் மற்றும் நெற்றியில் சற்று அழுத்தித் தேய்க்கவும்.

இப்போது, பருத்தி துணியை வெந்நீரில் நனைக்கவும். அறை வெப்பநிலைக்கு வரும் வரை துணியை முகத்தில் அழுத்திப் பிடிக்கவும்.

துணியை எடுத்த பின்பு மீண்டும் மிதமான சூடுள்ள நீரில் நனைக்கவும். இந்த முறை துணியை வைத்து அழுத்துவதற்குப் பதிலாக, எண்ணெய்யை அகற்றுவதுபோல் அழுத்தி மசாஜ் செய்யவும். அதன்பிறகு, டிஷ்யூ பேப்பரால் முகத்தைத் துடைத்து உலர வைக்கவும்.

இவ்வாறு தினமும் காலை மற்றும் இரவு செய்தால், ஒரு வாரத்தில் நல்ல பலன் கிடைக்கும். சருமம் பளபளப்பாகவும், புத்துணர்ச்சியுடனும் இருக்கும். எண்ணெய்ப்பசை கொண்ட சருமத்தில் அதிகப்படியான எண்ணெய் உற்பத்தி குறையும்.

மேலும் செய்திகள்