< Back
பிற விளையாட்டு
இந்திய ஓபன் பேட்மிண்டன்: முதல் சுற்றில் சாய்னா நேவால் அடுத்த சுற்றுக்கு முன்னேற்றம்

கோப்புப்படம் 

பிற விளையாட்டு

இந்திய ஓபன் பேட்மிண்டன்: முதல் சுற்றில் சாய்னா நேவால் அடுத்த சுற்றுக்கு முன்னேற்றம்

தினத்தந்தி
|
18 Jan 2023 1:10 AM IST

முன்னாள் சாம்பியனான இந்தியாவின் சாய்னா நேவால் அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

புதுடெல்லி,

இந்திய ஓபன் பேட்மிண்டனில் இந்திய நட்சத்திர வீராங்கனை பி.வி.சிந்து முதல் சுற்றிலேயே அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.

சிந்து வெளியே; சாய்னா உள்ளே

மொத்தம் ரூ.7½ கோடி பரிசுத்தொகைக்கான இந்திய ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி டெல்லியில் நேற்று தொடங்கியது. இதில் முன்னாள் உலக சாம்பியனும், 7-ம் நிலை வீராங்கனையுமான இந்தியாவின் பி.வி.சிந்து முதல் சுற்றிலேயே அதிர்ச்சி தோல்வி அடைந்தார். அவரை தரநிலையில் 30-வது இடத்தில் உள்ள தாய்லாந்தின் சுபனிதா கேட்தோங் 21-14, 22-20 என்ற நேர் செட்டில் தோற்கடித்தார். சமீபத்தில் மலேசிய ஓபனில் முதல் சுற்றுடன் நடையை கட்டிய சிந்து அதன் தொடர்ச்சியாக இப்போது உள்நாட்டிலும் சோபிக்க தவறினார்.

முன்னாள் சாம்பியனான இந்தியாவின் சாய்னா நேவால் மற்றொரு ஆட்டத்தில் 21-17, 12-21, 21-19 என்ற செட் கணக்கில் டென்மார்க்கின் மியா பிளிச்பெல்டை வீழ்த்தினார். இந்த வெற்றியை வசப்படுத்த சாய்னாவுக்கு 63 நிமிடங்கள் தேவைப்பட்டது.

சாய்னா அடுத்து ஒலிம்பிக் சாம்பியனான சீனாவின் சென் யு பேவுடன் மல்லுகட்டுகிறார். இதே போல் ரியோ ஒலிம்பிக் சாம்பியனான கரோலினா மரின் (ஸ்பெயின்) 21-13, 21-18 என்ற நேர் செட்டில் 2017-ம் ஆண்டு உலக சாம்பியனான நஜோமி ஒகுஹராவை (ஜப்பான்) வீழ்த்தினார்.

லக்ஷயா சென் வெற்றி

ஆண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்றில் நடப்பு சாம்பியனான இந்தியாவின் லக்ஷயா சென் 21-14, 21-15 என்ற நேர் செட்டில் சக நாட்டவரான எச்.எஸ்.பிரனாயை வீழ்த்தினார். மலேசிய ஓபனில் பிரனாயிடம் தோல்வி அடைந்த லக்ஷயா சென் அதற்கு இப்போது பதிலடி கொடுத்து இருக்கிறார். காமன்வெல்த் விளையாட்டு சாம்பியனான லக்ஷயா சென் 2-வது சுற்றில் டென்மார்க்கின் ராஸ்மஸ் ஜெம்கேவை எதிர்கொள்கிறார். முன்னதாக ராஸ்மஸ் 21-15, 21-11 என்ற நேர் செட்டில் 2 முறை உலக சாம்பியனான கென்டோ மோமோட்டாவை (ஜப்பான்) விரட்டினார்.

இரட்டையர் பிரிவின் முதல் சுற்றில் நடப்பு சாம்பியனான இந்தியாவின் சாத்விக் சாய்ராஜ் ரங்கி ரெட்டி- சிராக் ஷெட்டி கூட்டணி 21-13, 21-15 என்ற நேர் செட்டில் கிறிஸ்டோபர் கிரிம்லி- மேத்யூ கிரிம்லி (ஸ்காட்லாந்து) ஜோடியை வீழ்த்தி 2-வது சுற்றுக்கு தகுதி பெற்றது.

பெண்கள் இரட்டையரில் இந்தியாவின் திரீஷா ஜாலி- காயத்ரி கோபிசந்த் ஜோடி 22-20, 17-21, 21-18 என்ற செட் கணக்கில் பிரான்சின் மார்கோட் லம்பர்ட்- அன்னே டிரான் இணையை வென்றது.

மேலும் செய்திகள்