< Back
மற்றவை
சிந்தனைப் பகிர்வின் முக்கியத்துவம்
மற்றவை

சிந்தனைப் பகிர்வின் முக்கியத்துவம்

தினத்தந்தி
|
17 July 2022 1:30 AM GMT

மனதில் உள்ளவற்றை பிறரிடம் பகிர்ந்துகொள்ளும் பழக்கம் இல்லாமை, காலப்போக்கில் மனஅழுத்தத்தையும், தனிமையையும் உண்டாக்கி, வாழ்வில் வெறுமையை ஏற்படுத்தும்.

'பகிர்தல்' வாழ்வில் முக்கியமானது. அதன்மூலம், வாழ்வை ஒரு கட்டத்தில் இருந்து அடுத்தக் கட்டத்துக்கு நகர்த்துவதற்கான உந்துதல் கிடைக்கும். நமக்குள் இருக்கும் சிந்தனையை, எண்ணங்களை மற்றவர்களிடம் பகிந்துகொள் வதால் இரு தரப்புக்கும் நன்மை உண்டாகும்.

மனதில் உள்ளவற்றை பிறரிடம் பகிர்ந்துகொள்ளும் பழக்கம் இல்லாமை, காலப்போக்கில் மனஅழுத்தத்தையும், தனிமையையும் உண்டாக்கி, வாழ்வில் வெறுமையை ஏற்படுத்தும். மனதில் இருக்கும் உணர்வுகளை மற்றவரிடம் பகிர்வது, நம்மைப் பற்றி புரிந்துகொள்ள உதவும். இதன் மூலம் நம்முடைய எண்ணங்களின் கோணம் மாறும். எது சரி, எது தவறு என்ற குழப்பம் தீரும். தெளிவு கிடைக்கும். மனம் அமைதி பெறும். நமக்குள் இருக்கும் தாழ்வு மனப்பான்மை நீங்கும். முடிவெடுக்கும் திறன் அதிகரிக்கும். ஒரே இடத்தில் சிந்தனைகளை தேங்கவிடாமல், தொடர்ந்து நகர்ந்து செல்ல உதவும்.

அதே நேரத்தில் நம்முடைய அனைத்து எண்ணங்களையும் மற்றவர்களிடம் பகிர வேண்டும் என்ற அவசியம் இல்லை. மனதில் உள்ளவற்றை, அனைவரிடமும் பகிர்வதனால் ஏற்படும் விளைவுகளைத் தவிர்ப்பதற்கு, நம்பிக்கைக்கு உரியவர்களிடம் மட்டும் பகிர்வது சிறந்தது. சரியான சிந்தனையை, சரியான நபரிடம் பகிர்வது நன்மை அளிப்பதுடன், முன்னேற்றத்துக்கும் வழிவகுக்கும்.

மேலும் செய்திகள்