< Back
கைவினை கலை
சேலையை மாடர்ன் கவுன் போல அணியலாம்
கைவினை கலை

சேலையை 'மாடர்ன் கவுன்' போல அணியலாம்

தினத்தந்தி
|
9 April 2023 7:00 AM IST

எல்லா பெண்களிடமும் சேலை இருக்கும். அவ்வாறு உங்களிடம் இருக்கும் சேலையை, சட்டென அழகான ஸ்டைலில் கவுன் போல அணியலாம். அதை தைக்க வேண்டிய அவசியமும் இல்லை.

மாடர்ன் உடை அணிவது பல பெண்களுக்கு பிடிக்கும். பிறந்தநாள் விழா, மாலை நேர நிகழ்ச்சிகள் போன்றவற்றுக்கு இவ்வகை உடைகள் பொருத்தமாக இருக்கும். ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும் ஏற்ற வகையில் மாடர்ன் உடைகள் வாங்கி அணிவது, சற்றே செலவை அதிகரிக்கும் செயல்தான். இதற்கு மாற்றுவழி இருக்கிறது. எல்லா பெண்களிடமும் சேலை இருக்கும். அவ்வாறு உங்களிடம் இருக்கும் சேலையை, சட்டென அழகான ஸ்டைலில் கவுன் போல அணியலாம். அதை தைக்க வேண்டிய அவசியமும் இல்லை. அதற்கான குறிப்புகள் இதோ…

1. இதற்காக சாட்டின் ரக சேலையை தேர்ந்தெடுத்து கொள்ளுங்கள். படத்தில் காட்டியவாறு முதலில் நடுப்பகுதியில் முடிச்சு போட்டு கொள்ளுங்கள்.

2. பின்னர் வலது பக்கத்தின் மேல் நுனியை, இடது பக்கத்தின் மேல் நுனியுடன் இணைத்து முடிச்சு போடுங்கள்.

3. அதனை படத்தில் காட்டியவாறு உங்கள் கழுத்தில் மாட்டிக் கொள்ள வேண்டும்.

4. இப்போது இரண்டு பக்கத்தையும் சேர்த்து நடுவில் பின் செய்து கொள்ளுங்கள்.

5. வலது புறம் இருக்கும் துணியில் ஒரே அளவில் அழகாக மடிப்புகளை (பிளீட்ஸ்) உருவாக்குங்கள். பின்னர் அவற்றை இடுப்பு பகுதியின் உள்ளே சொருகிக் கொள்ளுங்கள்.

6 இடது பக்கத்திலும் அவ்வாறே மடிப்பு வைத்து அதை இடுப்பு பகுதியில் சொருகுங்கள்.

7. இப்போது இரண்டு பக்கமும் இருக்கும் மடிப்பு பகுதியை அப்படியே பின்புறம் கொண்டு செல்லவும்.

8. அதனை முடிச்சு போட்டு, அதை சேப்டி பின் மூலம் தலை முடியுடன் இணைத்துக் கொள்ளலாம் அல்லது ரவிக்கையின் கழுத்துப் பகுதியின் உள்ளே சொருகலாம்.

9. பிறகு சேப்டி பின் கொண்டு நடுப்பகுதியை இணைக்கவும்.

10. இடுப்புப் பகுதியில் அழகான பெல்ட் அல்லது ஒட்டியாணம் அணிந்தால் உங்கள் சேலை, பேன்சி மற்றும் ஸ்டைலிஷ் கவுனாக மாறிவிடும்.

மேலும் செய்திகள்