< Back
கைவினை கலை
நேர்மறை ஆற்றலை அதிகரிக்கும் போல்கா-டாட் நகைகள்
கைவினை கலை

நேர்மறை ஆற்றலை அதிகரிக்கும் 'போல்கா-டாட்' நகைகள்

தினத்தந்தி
|
18 Jun 2023 7:00 AM IST

போல்கா-டாட் நகைகள் உலகில் உள்ள பல்வேறு கலாசாரங்களிலும் அதிர்ஷ்டம், செல்வம், மறுமலர்ச்சி, தூய்மை மற்றும் ஆற்றல் போன்றவற்றின் அடையாளமாக தி்கழ்கிறது.

'போல்கா-டாட்' என்பது சூரியன் மற்றும் சந்திரனின் வடிவங்களை அடிப்படையாகக்கொண்டு உருவாக்கப்படுவதாகும். சூரியனுக்கான ஆற்றலும், சந்திரனுக்கான அமைதியும் நம் வாழ்வில் பிரதிபலிக்கும் விதமாக இந்த 'போல்கா-டாட் நகைகள்' வடிவமைக்கப்படுகின்றன. அடர்ந்த வண்ணப் பின்னணியில், மற்றொரு அடர் வண்ணத்தில் சிறிய புள்ளிகள் குறிப்பிட்ட இடைவெளியில் அமைந்திருப்பதே போல்கா-டாட் வடிவமைப்பாகும். இத்தகைய வடிவமைப்பைப் பயன்படுத்தி நகைகள் மற்றும் ஆடைகள் தயாரிக்கப்படுகின்றன. போல்கா-டாட் நகைகள் உலகில் உள்ள பல்வேறு கலாசாரங்களிலும் அதிர்ஷ்டம், செல்வம், மறுமலர்ச்சி, தூய்மை மற்றும் ஆற்றல் போன்றவற்றின் அடையாளமாக தி்கழ்கிறது. பார்ப்பவர்களின் கவனத்தை ஈர்ப்பதும், உணர்ச்சியை கட்டுப்படுத்துவதும் இந்த வகை நகைகளின் சிறப்பம்சமாகும். போல்கா-டாட் நகைகளின் தொகுப்பு இதோ..

மேலும் செய்திகள்