< Back
கைவினை கலை
கைவினை கலை
கூல் லுக் தரும் 'பீச் ஜூவல்லரி'
|19 March 2023 7:00 AM IST
கோடை விடுமுறையை நினைவுபடுத்தும் வானம் மற்றும் கடலின் வண்ணங்கள், மின்னல், நட்சத்திரங்கள், பூக்கள், சிப்பிகள், முத்துக்கள், பாசிகள் மற்றும் கடல் சார்ந்த அலங்காரப் பொருட்கள் கொண்டு பிரத்யேகமாக ‘பீச் நகைகள்’ வடிவமைக்கப்படுகின்றன.
கோடை காலம் வந்தாலே, பலருக்கும் சிலுசிலுவென்று இருக்கும் கடற்கரை காற்றும், கால்களை நனைக்கும் அலைகளும் நினைவுக்கு வரும். வெப்பம் நிறைந்த கோடையில் நாம் அணியும் உடை மற்றும் நகைகளில், குளுமையை உணர்த்தும் அம்சங்கள் இருப்பது மனதுக்கு புத்துணர்வு தரும். அந்த வகையில், கோடை விடுமுறையை நினைவுபடுத்தும் வானம் மற்றும் கடலின் வண்ணங்கள், மின்னல், நட்சத்திரங்கள், பூக்கள், சிப்பிகள், முத்துக்கள், பாசிகள் மற்றும் கடல் சார்ந்த அலங்காரப் பொருட்கள் கொண்டு பிரத்யேகமாக 'பீச் நகைகள்' வடிவமைக்கப்படுகின்றன.
கோடை கால உடைகளுக்குப் பொருந்தும் வகையிலும், எடை குறைவாகவும் இருப்பதே இவற்றின் சிறப்பம்சம். 'பீச் நகைகள்' உங்களுக்கு கூல் லுக் தருவதுடன், அணிவதற்கு எளிதாகவும் இருக்கும். அவற்றில் சில.