< Back
கைவினை கலை
மனதை மயக்கும் வண்ண அணிகலன்கள்
கைவினை கலை

மனதை மயக்கும் வண்ண அணிகலன்கள்

தினத்தந்தி
|
23 July 2023 7:00 AM IST

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை, ‘டை டை’ நகைகளை அனைத்து விதமான ஆடைகளுக்கும் அணியலாம். பயணங்களின்போது இவ்வகை நகைகள் அணிவது உற்சாகத்தை அதிகரிக்கும். அனைத்து நிற சருமத்தினருக்கும் பொருந்துவதே ‘டை டை’ நகைகளின் தனிச்சிறப்பாகும்.

துணிகளுக்கு சாயம் ஏற்றும் முறையே, இந்த வகையான நகை தயாரிப்புக்கு பின்பற்றப்படுகிறது. இதனால் இவற்றை 'டை டை (Tie Dye) நகைகள்' என்று அழைக்கிறார்கள். துணியைப் போன்று பிளாஸ்டிக், உலோகங்கள், கண்ணாடி மற்றும் திரவக் கண்ணாடிகளில் பல வண்ணங்களைக் கொண்டு சாயமேற்றப்பட்டு, பல்வேறு வடிவமைப்புகளில் இந்த நகைகள் தயாரிக்கப்படுகின்றன. இத்தகைய நகைகளில் காணப்படும் வண்ணங்கள் மன அமைதி மற்றும் நேர்மறை எண்ணங்களை அதிகரிக்கும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை, 'டை டை' நகைகளை அனைத்து விதமான ஆடைகளுக்கும் அணியலாம். பயணங்களின்போது இவ்வகை நகைகள் அணிவது உற்சாகத்தை அதிகரிக்கும். அனைத்து நிற சருமத்தினருக்கும் பொருந்துவதே 'டை டை' நகைகளின் தனிச்சிறப்பாகும். அவற்றில் சில..

மேலும் செய்திகள்