ஸ்டைலான தோற்றம் தரும் 'ஹிப் பெல்ட்'
|இளம்பெண்கள் புடவை அல்லது கவுன் அணியும்போது 'ஹிப் பெல்ட்' என்ற துணி ஒட்டியாணம் அணிவது தற்போது பேஷனாக இருக்கிறது. அதை எளிதாக வீட்டிலேயே தயாரிக்க முடியும்.
இளம்பெண்கள் புடவை அல்லது கவுன் அணியும்போது 'ஹிப் பெல்ட்' என்ற துணி ஒட்டியாணம் அணிவது தற்போது பேஷனாக இருக்கிறது. அதை எளிதாக வீட்டிலேயே தயாரிக்க முடியும். அதற்கான குறிப்புகள் இங்கே...
தேவையான பொருட்கள்:
சில்க் காட்டன் துணி - ¼ மீட்டர்
1.50 அங்குல லேஸ் - 19 அங்குலம்
1.25 அங்குலம் எலாஸ்டிக் - 9 அங்குலம் (2 துண்டுகள்)
கொக்கி செட் - 1
செய்முறை:
படம் 1:
36 அங்குல இடுப்பளவு உள்ள பெல்ட் தயாரிப்பதற்கு முதலில் துணியை 19 x 4 அங்குல நீள அகலம் கொண்ட 3 துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும். எலாஸ்டிக்கை 9 அங்குல நீளம் கொண்ட 2 துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.
படம் 2:
மூன்று துண்டு துணிகளையும் ஒன்றோடு ஒன்று (நீளவாக்கில்) இணைத்து தையல் போடவும். இரண்டு தையல்கள் போட்டால் பிரியாமல் இருக்கும்.
(இதில் 1 மற்றும் 3-வது துண்டுகளின் உள்ளே எலாஸ்டிக்கை நுழைக்க வேண்டும். நடு துண்டின் மேலே 'லேஸ்' வைத்து தைக்க வேண்டும்).
படம் 3:
படத்தில் காட்டி இருப்பதுபோல துணிகளை இரண்டாக மடித்து தையல் போட வேண்டும். இரண்டாவது துண்டை இணைத்து இருக்கும் ஜாயிண்ட் வரை தையல் போட்டால் போதும்.
படம் 4:
அந்த துண்டை படத்தில் காட்டி இருப்பதுபோல லூப் டர்னர் அல்லது சேப்டி பின் கொண்டு வெளிப்புறமாக திருப்பவும்.
படம் 5:
ஒரு துண்டு எலாஸ்டிக்கின் ஒரு முனையில் சேப்டி பின்னை இணைத்து இதற்குள் நுழைத்து உள்ளே தள்ளவும்.
படம் 6:
இரண்டு துணி துண்டுகளை இணைப்பதற்காக போடப்பட்ட தையலின் மீது எலாஸ்டிக்கை வைத்து தையல் போடவும். இதே போல மற்றொரு பக்கமும் செய்ய வேண்டும்.
படம் 7:
நடுதுண்டு துணியின் ஓரத்தை உள்புறமாக மடித்து மேலே தையல் போடவும்.
படம் 8:
லேஸ் துணியை நடு துண்டின் மீது வைத்து, நீளவாக்கிலும், அகல வாக்கிலும் தையல் போடவும். அகலவாக்கில் தைக்கும்போது, லேஸ் முனைகளை உட்புறமாக மடித்து அதன் மேலே தையல் போடவும்.
படம் 9 & 10:
இரண்டு முனைகளிலும் எலாஸ்டிக்கை துணியின் விளிம்பு வரை கொண்டு வந்து சேப்டி பின்னை அகற்றிவிட்டு, துணியோடு சேர்த்து சதுர வடிவில் தையல் போடவும்.
படம் 11:
இரண்டு பக்கங்களிலும் உள்பக்கம், கொக்கி செட்டை பொருத்தவும். இதன்மூலம் இடுப்பு அளவுக்கு ஏற்றபடி ஹிப் பெல்ட்டை அணிந்துகொள்ள முடியும்.
படம் 12:
இப்போது அழகான 'ஹிப் பெல்ட்' தயார்.