< Back
கைவினை கலை
கைவினை கலை
இளசுகளை ஈர்க்கும் புளோரா டானிகா நகைகள்
|13 Aug 2023 7:00 AM IST
‘புளோரா டானிகா நகைகள்’ தங்கம், வெள்ளி, பிளாட்டினம் என அனைத்து வகையான உலோகங்கள், காகிதங்கள் மற்றும் துணிகள் கொண்டும் தயாரிக்கப்படுகின்றன. இவை அனைத்து வகையான நிறம் கொண்ட சருமத்தினருக்கும் பொருத்தமாக இருக்கும்.
டென்மார்க் நாட்டின் பூர்வீக காடுகளில் மலரும் பூக்களின் புகைப்படங்களையும், தகவல்களையும் கொண்ட தொகுப்பையே 'புளோரா டானிகா' என்று அழைக்கிறார்கள். இதை அடிப்படையாகக்கொண்டு இவ்வகை நகைகளின் நுணுக்கமான கலை வடிவமைப்பு எடுக்கப்பட்டதால் இவற்றுக்கு 'புளோரா டானிகா நகைகள்' என்று பெயர்.
மலர்களின் வடிவமைப்பு, அச்சு அசலாக நகைகளாக தயாரிக்கப்படுவதே இவற்றின் சிறப்பம்சமாகும். 'புளோரா டானிகா நகைகள்' தங்கம், வெள்ளி, பிளாட்டினம் என அனைத்து வகையான உலோகங்கள், காகிதங்கள் மற்றும் துணிகள் கொண்டும் தயாரிக்கப்படுகின்றன. இவை அனைத்து வகையான நிறம் கொண்ட சருமத்தினருக்கும் பொருத்தமாக இருக்கும். இந்த நகைகளின் தொகுப்பு…