< Back
காமன்வெல்த்-2022
காமன்வெல்த் நிறைவு விழா: இந்திய தேசிய கொடியை ஏந்திச் செல்லும் நிகாத் ஜரீன், சரத் கமல்

Image Tweeted By @Media_SAI

காமன்வெல்த்-2022

காமன்வெல்த் நிறைவு விழா: இந்திய தேசிய கொடியை ஏந்திச் செல்லும் நிகாத் ஜரீன், சரத் கமல்

தினத்தந்தி
|
8 Aug 2022 7:54 PM IST

காமன்வெல்த் நிறைவு விழா இந்திய நேரப்படி ஆகஸ்ட் 9 ஆம் தேதி அதிகாலை 12.30 மணிக்கு நடைபெறுகிறது.

பர்மிங்காம்,

72 நாடுகள் பங்கேற்றுள்ள 22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் நடைபெற்று வருகிறது. கடந்த மாதம் 28 ஆம் தேதி மிக பிரம்மாண்டமான தொடக்க விழாவுடன் தொடங்கிய இந்த தொடரின் நிறைவு விழா இந்திய நேரப்படி ஆகஸ்ட் 9 ஆம் தேதி அதிகாலை 12.30 மணிக்கு நடைபெறுகிறது.

இந்த காமன்வெல்த் போட்டியில் இந்தியா மொத்தமாக 22 தங்கம்,16 வெள்ளி, 23 வெண்கலம் என மொத்தம் 61 பதக்கங்களை வென்று பதக்க பட்டியலில் 4-வது இடத்தை பிடித்து நிறைவு செய்துள்ளது.

இந்நிலையில் காமன்வெல்த் போட்டிகள் இன்றுடன் நிறைவு பெற உள்ள நிலையில் நிறைவு விழாவில் இந்திய தேசிய கொடியை ஏந்திச்செல்லும் வீரர்களாக டேபிள் டென்னிஸ் வீரர் அச்சந்தா ஷரத் கமல் மற்றும் குத்துச்சண்டை வீராங்கனை நிகாத் ஜரீன் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இந்த காமன்வெல்த் தொடரில் ஷரத் கமல் டேபிள் டென்னிஸ் போட்டியிலும், நிகாத் ஜரீன் குத்துச்சண்டையிலும் தங்கம் வென்று இருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்