< Back
காமன்வெல்த்-2022
காமன்வெல்த்-2022
காமன்வெல்த் டேபிள் டென்னிஸ் போட்டி : இந்திய ஆண்கள் அணி அரையிறுதிக்கு முன்னேற்றம்
|31 July 2022 6:24 PM IST
இந்திய அணி 3-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று அரை இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.
பர்மிங்காம்,
72 நாடுகள் பங்கேற்றுள்ள 22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இந்தியா இதுவரை பளுதூக்குதலில் இரண்டு தங்கம், இரண்டு வெள்ளி, ஒரு வெண்கலம் என 5 பதக்கங்களை வென்றுள்ளது.
இதில் இன்று நடைபெற்ற டேபிள் டென்னிஸ் காலிறுதி போட்டியில் சரத் கமல் தலைமையிலான இந்திய ஆண்கள் அணி ,வங்கதேசத்தை எதிர்கொண்டது. இந்த போட்டியில் ஒற்றையர் பிரிவில் சரத் கமல் மற்றும் சத்யன் வெற்றி பெற்றனர். இரட்டையர் பிரிவில் சத்யன் மற்றும் ஹர்மீத் தேசாய் ஜோடி வெற்றி பெற்றதன் மூலம் இந்திய அணி 3-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று அரை இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர்.