< Back
காமன்வெல்த்-2022
காமன்வெல்த்: வெள்ளி பதக்கத்தை தங்கமாக மாற்றும் வரை நிறுத்த மாட்டோம் - ஜெமிமா ரோட்ரிக்ஸ்

Image Tweeted By @JemiRodrigues

காமன்வெல்த்-2022

காமன்வெல்த்: "வெள்ளி பதக்கத்தை தங்கமாக மாற்றும் வரை நிறுத்த மாட்டோம்" - ஜெமிமா ரோட்ரிக்ஸ்

தினத்தந்தி
|
8 Aug 2022 10:06 PM IST

பரபரப்பான இறுதி போட்டியில் ஆஸ்திரேலிய அணியிடம் இந்திய அணி 9 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்ந்தது.

பர்மிங்காம்,

72 நாடுகள் பங்கேற்ற 22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் கடந்த மாதம் 28 ஆம் தேதி மிக பிரம்மாண்டமான தொடக்க விழாவுடன் தொடங்கியது. விளையாட்டு போட்டிகள் இன்றுடன் நிறைவு பெறும் நிலையில் இந்த தொடரின் நிறைவு விழா ஆகஸ்ட் 9 ஆம் தேதி இந்திய நேரப்படி அதிகாலை 12.30 மணிக்கு நடைபெறுகிறது.

இந்த காமன்வெல்த் போட்டியில் இந்தியா மொத்தமாக 22 தங்கம்,16 வெள்ளி, 23 வெண்கலம் என மொத்தம் 61 பதக்கங்களை வென்று பதக்க பட்டியலில் 4-வது இடத்தை பிடித்து நிறைவு செய்துள்ளது. முதல் முறையாக காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் இந்த முறை மகளிர் கிரிக்கெட் கிரிக்கெட் அறிமுகம் செய்யப்பட்டது.

நேற்று நடந்த மகளிர் கிரிக்கெட்டின் பரபரப்பான இறுதி போட்டியில் உலக சாம்பியன் ஆஸ்திரேலிய அணியிடம் இந்திய அணி 9 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்ந்தது. இதனால் இந்திய அணி வெள்ளி பதக்கம் வென்றது.

இந்த நிலையில் இறுதி போட்டியில் தோல்வி அடைந்தது குறித்து இந்திய அணியின் நட்சத்திர வீராங்கனை ஜெமிமா ரோட்ரிக்ஸ் உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். இது குறித்து அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், " இந்த அணி வித்தியாசமானது. இந்தப் தொடர் முழுவதும் எங்கள் அணி வெளிப்படுத்திய துணிவு, உறுதிப்பாடு சிறப்பாக சிறப்பாக இருந்தது.

பல சிறப்பான தருணங்கள் இருந்தன. ஆனால் அதே நேரத்தில் கிரிக்கெட் எப்போதும் நமக்கு கற்பிப்பதை நிறுத்தாது என்று நினைக்கிறேன். இந்த வெள்ளி பதக்கத்தை தங்கமாக மாற்றும் வரை நாங்கள் நிறுத்த மாட்டோம்." என பதிவிட்டுள்ளார்.

மேலும் செய்திகள்