< Back
காமன்வெல்த்-2022
காமன்வெல்த் டேபிள் டென்னிஸ் போட்டி : ஷரத் கமல்- ஸ்ரீஜா அகுலா இணை அரையிறுதிக்கு முன்னேற்றம்

Image Tweeted By @Media_SAI

காமன்வெல்த்-2022

காமன்வெல்த் டேபிள் டென்னிஸ் போட்டி : ஷரத் கமல்- ஸ்ரீஜா அகுலா இணை அரையிறுதிக்கு முன்னேற்றம்

தினத்தந்தி
|
5 Aug 2022 9:35 PM IST

ஷரத் கமல்- ஸ்ரீஜா அகுலா இணை இங்கிலாந்து நாட்டின் லியாம் பிட்ச்போர்ட்- டின் டின் ஹோ இணையை எதிர்கொண்டனர் .

பர்மிங்காம்,

72 நாடுகள் பங்கேற்றுள்ள 22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் நடைபெற்று வருகிறது. இந்த காமன்வெல்த் போட்டியில் இந்தியா இதுவரை 6 தங்கம், 7 வெள்ளி, 7 வெண்கலம் என 20 பதக்கங்களை வென்றுள்ளது.

டேபிள் டென்னிஸ் போட்டியில் அணி சுற்று நிறைவடைந்துள்ள நிலையில் நேற்று முதல் ஒற்றையர் மற்றும் இரட்டையர் பிரிவு ஆட்டங்கள் தொடங்கின. இதில் இன்று நடந்த கலப்பு இரட்டையர் பிரிவின் காலிறுதி சுற்றில் இந்தியாவின் ஷரத் கமல்- ஸ்ரீஜா அகுலா இணை இங்கிலாந்து நாட்டின் லியாம் பிட்ச்போர்ட்- டின் டின் ஹோ இணையை எதிர்கொண்டனர் .

பரபரப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் இந்திய இணை 3-2 (11-7, 8-11, 11-8, 11-13, 11-9 செட் கணக்கு ) என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதி போட்டிக்கு தகுதி பெற்றனர்.

மேலும் செய்திகள்