< Back
காமன்வெல்த்-2022
காமன்வெல்த் பேட்மிண்டன் : இந்திய இணை காயத்ரி கோபிசந்த்- திரிஷா காலிறுதிக்கு முன்னேற்றம்

Image Tweeted By @Media_SAI

காமன்வெல்த்-2022

காமன்வெல்த் பேட்மிண்டன் : இந்திய இணை காயத்ரி கோபிசந்த்- திரிஷா காலிறுதிக்கு முன்னேற்றம்

தினத்தந்தி
|
5 Aug 2022 6:58 PM IST

திரிஷா -காயத்ரி இணை மிக எளிதாக வெற்றி பெற்று காலிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளனர்.

பர்மிங்காம்,

72 நாடுகள் பங்கேற்றுள்ள 22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் நடைபெற்று வருகிறது. இந்த காமன்வெல்த் போட்டியில் இந்தியா இதுவரை 6 தங்கம், 7 வெள்ளி, 7 வெண்கலம் என 20 பதக்கங்களை வென்றுள்ளது.

பேட்மிண்டன் மற்றும் டேபிள் டென்னிஸ் போட்டிகளில் அணி சுற்று நிறைவடைந்துள்ள நிலையில் நேற்று முதல் ஒற்றையர் மற்றும் இரட்டையர் பிரிவு ஆட்டங்கள் தொடங்கின.

இந்த நிலையில் பேட்மிண்டன் பெண்கள் இரட்டையர் பிரிவில் இன்று நடைபெற்ற 2-வது சுற்றில் இந்தியாவின் திரிஷா ஜாலி -காயத்ரி கோபிசந்த் புல்லேலா ஜோடி மொரீஷியஸின் சங் ஜெமிமா-முங்க்ரா கணேஷா ஜோடியை எதிர்கொண்டனர்.

இந்த போட்டியில் இந்திய ஜோடி அசத்தல் ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இதனால் திரிஷா -காயத்ரி கோபிசந்த் இணை 21-2, 21-4 என்ற செட் கணக்கில் மிக எளிதாக வெற்றி பெற்று காலிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளனர்.

மேலும் செய்திகள்