< Back
காமன்வெல்த்-2022
காமன்வெல்த்-2022
காமன்வெல்த் ஸ்குவாஷ் போட்டி : இந்தியாவின் சவுரவ் கோசல் அரையிறுதிக்கு முன்னேற்றம்
|1 Aug 2022 9:28 PM IST
காலிறுதி சுற்றில் இந்தியாவின் சவுரவ் கோசல் ஸ்காட்லாந்தின் கிரெக் லோபனை எதிர்கொண்டார்.
பர்மிங்காம்,
72 நாடுகள் பங்கேற்றுள்ள 22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இந்தியா பளுதூக்குதலில் 3 தங்கம், இரண்டு வெள்ளி, ஒரு வெண்கலம் என மொத்தம் 6 பதக்கங்களை வென்றுள்ளது.
4-வது நாளான இன்று இந்தியா ஜூடோ மற்றும் லான் பவுல்ஸில் தலா ஒரு பதக்கத்தை உறுதி செய்துள்ளது. இந்த நிலையில் இன்று நடைபெற்ற ஸ்குவாஷ் போட்டியின் ஆடவர் ஒற்றையர் பிரிவு காலிறுதி சுற்றில் இந்தியாவின் சவுரவ் கோசல் ஸ்காட்லாந்தின் கிரெக் லோபனை எதிர்கொண்டார்.
இந்த போட்டியில் சவுரவ் கோசல் 3-1 என்ற கணக்கில் வெற்றி பெற்றார். முதல் சுற்றில் 11-5 என்ற கணக்கில் வெற்றி பெற்ற சவுரவ், 2-வது சுற்றில் தோல்வி அடைந்தார். பின்னர் 11-7, 11-3 என்ற கணக்கில் மொத்தம் 3 சுற்றுகளில் வெற்றி பெற்று அரையிறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்.