< Back
காமன்வெல்த்-2022
காமன்வெல்த் டேபிள் டென்னிஸ் : வெண்கலம் வென்றார் தமிழக வீரர் சத்யன் ஞானசேகரன்

Image Courtesy : @Media_SAI

காமன்வெல்த்-2022

காமன்வெல்த் டேபிள் டென்னிஸ் : வெண்கலம் வென்றார் தமிழக வீரர் சத்யன் ஞானசேகரன்

தினத்தந்தி
|
8 Aug 2022 5:23 PM IST

இந்த போட்டியில் தமிழக வீரர் சத்யன் இங்கிலாந்தின் பால் டிரிங்ஹாலை எதிர்கொண்டார்.

பர்மிங்காம்,

72 நாடுகள் பங்கேற்றுள்ள 22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் நடைபெற்று வருகிறது. இந்த காமன்வெல்த் போட்டியில் இந்தியா இதுவரை 20 தங்கம், 15 வெள்ளி, 22 வெண்கலம் என மொத்தம் 57 பதக்கங்களுடன் பதக்க பட்டியலில் 4-வது இடத்தில் உள்ளது.

குறிப்பாக இன்று நடந்த பேட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் பி.வி. சிந்து, லக்சயா சென் தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்தனர். இந்த நிலையில் டேபிள் டென்னிஸில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் வெண்கல பதக்கத்துக்கான போட்டி இன்று நடைபெற்றது. இந்த போட்டியில் தமிழக வீரர் சத்யன் ஞானசேகரன் இங்கிலாந்தின் பால் டிரிங்ஹாலை எதிர்கொண்டார்.

மிக பரபரப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் சத்யன் 11-9 11-3 11-5 8-11 9-11 10-12 11-9 என்ற கணக்கில் வெற்றி பெற்று வெண்கல பதக்கம் வென்றார்.

மேலும் செய்திகள்