காமன்வெல்த் ஸ்குவாஷ் போட்டி : இந்தியாவின் ஜோஷ்னா சின்னப்பா காலிறுதியில் தோல்வி
|இந்த போட்டியில் ஜோஷ்னா 9-11, 5-11, 13-15 என்ற கணக்கில் தோல்வி அடைந்தார்.
பர்மிங்காம்,
72 நாடுகள் பங்கேற்றுள்ள 22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இந்தியா இதுவரை 3 தங்கம், இரண்டு வெள்ளி, ஒரு வெண்கலம் என மொத்தம் 6 பதக்கங்களை வென்றுள்ளது. மேலும் இன்று லான் பவுல்ஸ் போட்டியில் இந்திய மகளிர் அணி ஒரு பதக்கத்தையும், ஜூடோவில் சுசிலா தேவி ஒரு பதக்கத்தையும் இந்தியாவுக்கு உறுதி செய்துள்ளனர்.
இந்த நிலையில் இன்று நடைபெற்ற ஸ்குவாஷ் போட்டியின் மகளிர் ஒற்றையர் பிரிவு காலிறுதி சுற்றில் இந்தியாவின் ஜோஷ்னா சின்னப்பா அதிர்ச்சி தோல்வி அடைந்துள்ளார். காலிறுதியில் கனடாவின் ஹோலி நாட்டனை அவர் எதிர்கொண்டார். இந்த போட்டியில் ஜோஷ்னா 9-11, 5-11, 13-15 என்ற கணக்கில் தோல்வி அடைந்தார். பதக்கம் வெல்வார் என எதிர்பார்க்கப்பட்ட ஜோஷ்னா சின்னப்பா தோல்வி அடைந்ததால் இந்திய ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.