காமன்வெல்த் மகளிர் கிரிக்கெட் இறுதிப்போட்டி : தங்கப் பதக்கம் வென்று வரலாறு படைக்குமா இந்திய அணி ?
|பேட்டிங்கில் நம்பிக்கை நட்சத்திரமாக ஸ்மிரிதி மந்தனா , ஜெமிமா ரோட்ரிக்ஸ் திகழ்கின்றனர்.
பர்மிங்காம்,
72 நாடுகள் பங்கேற்றுள்ள 22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் நடைபெற்று வருகிறது. இந்தியா இதுவரை 14 தங்கம், 11 வெள்ளி, 17 வெண்கலம் என மொத்தம் 42 பதக்கங்களை வென்றுள்ளது.
இந்த நிலையில் மகளிர் கிரிக்கெட் போட்டியில் இன்று நடைபெறவுள்ள இறுதி போட்டியில் உலக சாம்பியன் ஆஸ்திரேலிய அணியை இந்தியா எதிர்கொள்கிறது. அரையிறுதி போட்டியில் வலுவான இங்கிலாந்து அணியை வீழ்த்திய இந்திய அணி இறுதி போட்டியில் வெற்றி பெற்று தங்கப் பதக்கத்தை தட்டி செல்லும் முனைப்பில் களமிறங்குகிறது.
இந்திய அணியை பொறுத்தவரை பேட்டிங்கில் நம்பிக்கை நட்சத்திரமாக ஸ்மிரிதி மந்தனா , ஜெமிமா ரோட்ரிக்ஸ் திகழ்கின்றனர். பந்துவீச்சில் ஸ்நேக் ராணா, தீப்தி சர்மா அசத்தி வருகின்றனர். அதே நேரத்தில் ஆஸ்திரேலிய அணியில் ஆல்ரவுண்டர்களின் எண்ணிக்கை அதிகம் இருப்பதால் பேட்டிங் பந்துவீச்சு என இரண்டிலும் அசத்தி வருகின்றனர். இந்த போட்டி இந்திய நேரப்படி இரவு 9.30 மணிக்கு தொடங்குகிறது.