காமன்வெல்த் டேபிள் டென்னிஸ்: இந்திய அணி காலிறுதி சுற்றுக்கு முன்னேற்றம்
|இந்திய ஆண்கள் அணி சிங்கப்பூர் அணியை 3-0 என்ற கணக்கில் வீழ்த்தி காலிறுதி சுற்றுக்கு முன்னேறியது.
பர்மிங்காம்,
72 நாடுகள் பங்கேற்றுள்ள 22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் உள்ள அலெக்சாண்டர் ஸ்டேடியத்தில் நேற்று கோலாகலமாக தொடங்கியது. தொடக்க விழா முடிவடைந்த நிலையில் முதல் நாளான நேற்று பல்வேறு விளையாட்டு போட்டிகள் தொடங்கின.
இதில் நேற்று நடைபெற்ற டேபிள் டென்னிஸ் ஆண்கள் இரட்டையர் பிரிவு ஆட்டத்தில் இந்தியாவின் ஹர்மீத் தேசாய்- சத்தியன் ஞானசேகரன் ஜோடி சிங்கப்பூரை சேர்ந்த ஷாவோ ஃபெங் ஈதன் போ மற்றும் கிளாரன்ஸ் செவ் செ யூ ஜோடியை 11-5, 11-5 என்ற கணக்கில் வீழ்த்தியது.
ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்திய வீரர் சரத் கமல், சிங்கப்பூர் வீரர் பாங்க் யெவ் என் கோயனை, 11-8, 11-9 11-9 என்ற செட்களில் வீழ்த்தி பெற்றார். மற்றொரு ஆட்டத்தில் இந்திய வீரர் சத்தியன் ஞானசேகரன், சிங்கப்பூரின் கிளாரன்ஸ் செவ் சே யூவை 11-7, 11-5, 11-8 என்ற செட் கணக்கில் வீழ்த்தி வெற்றி பெற்றார். இதன் மூலம் இந்திய ஆண்கள் அணி சிங்கப்பூர் அணியை 3-0 என்ற கணக்கில் வீழ்த்தி உள்ளது. இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி காலிறுதி சுற்றுக்கு முன்னேறியது.