< Back
காமன்வெல்த்-2022
காமன்வெல்த்-2022
காமன்வெல்த் டேபிள் டென்னிஸ் : காலிறுதி சுற்றில் இந்திய மகளிர் அணி தோல்வி
|31 July 2022 7:43 AM IST
நேற்று நடைபெற்ற டேபிள் டென்னிஸ் காலிறுதி போட்டியில் இந்திய மகளிர் அணி ,மலேசியாவை எதிர்கொண்டது
பர்மிங்காம்,
72 நாடுகள் பங்கேற்றுள்ள 22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. தொடக்க விழா நேற்று முன் தினம் முடிவடைந்த நிலையில் இரண்டாம் நாளான நேற்று பல்வேறு விளையாட்டு போட்டிகள் தொடங்கி நடைபெற்றன.
இதில் நேற்று நடைபெற்ற டேபிள் டென்னிஸ் காலிறுதி போட்டியில் மணிகா பத்ரா தலைமையிலான இந்திய மகளிர் அணி ,மலேசியாவை எதிர்கொண்டது. இந்த போட்டியில் மலேசிய அணி 3-2 என்ற கணக்கில் இந்திய அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது.இதனால் இந்திய மகளிர் அணி டேபிள் டென்னிஸ் தொடரிலிருந்து வெளியேறியது.