< Back
காமன்வெல்த்-2022
காமன்வெல்த் டேபிள் டென்னிஸ் : தங்கம் வென்று இந்திய அணி சாதனை..!
காமன்வெல்த்-2022

காமன்வெல்த் டேபிள் டென்னிஸ் : தங்கம் வென்று இந்திய அணி சாதனை..!

தினத்தந்தி
|
2 Aug 2022 8:36 PM IST

தங்கம் வென்ற இந்திய அணிக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றது.

பர்மிங்காம்,

72 நாடுகள் பங்கேற்றுள்ள 22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இந்தியா இதுவரை பளுதூக்குதலில் இரண்டு தங்கம், இரண்டு வெள்ளி, ஒரு வெண்கலம் என 5 பதக்கங்களை வென்றுள்ளது.

இதில் இன்று நடைபெற்ற டேபிள் டென்னிஸ் இறுதி போட்டியில் சரத் கமல் தலைமையிலான இந்திய ஆண்கள் அணி ,சிங்கப்பூரை எதிர்கொண்டது.

இந்த போட்டியில் சத்யன் மற்றும் ஹர்மீத் தங்களுடைய ஒற்றையர் மற்றும் இரட்டையர் ஆட்டங்களில் வெற்றி பெற்றனர்.இதனால் இந்திய அணி 3- 1என்ற கணக்கில் வெற்றி பெற்று காமன்வெல்த் டேபிள் டென்னிஸ் போட்டியில் தங்கம் வென்று அசத்தியது.

தங்கம் வென்ற இந்திய அணிக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றது.

மேலும் செய்திகள்